Search
  • Follow NativePlanet
Share
» »பொது வகுப்பு பயணிகளுக்கு குட் நியூஸ் – 50 அம்ரித் பாரத் ரயில்களை இந்திய ரயில்வே இயக்க முடிவு!

பொது வகுப்பு பயணிகளுக்கு குட் நியூஸ் – 50 அம்ரித் பாரத் ரயில்களை இந்திய ரயில்வே இயக்க முடிவு!

இந்திய ரயில்வே உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக தினமும் 12,000 ரயில்களை இயக்கி ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்து வருகிறது. பரபரப்பான முறையில் இந்திய ரயில்வே இயங்கி கொண்டிருந்தாலும், பயணிகளுக்கான மேம்பட்ட மற்றும் வசதியான பயணத்தை வழங்குவதில் அனுதினமும் முயற்சி செய்து வருகிறது. அதன் ஒருபடியாக தற்போது, பொது பயணிகளுக்காக 50 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது!

Indian railways

இந்திய ரயில்வேயின் அடுத்த முயற்சி

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் என்பது அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. பயணிகளுக்கான சிறந்த வசதிகளை வழங்குதல், ரயில் நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் ரயில் பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

புதியதாக 50 அம்ரித் பாரத் ரயில்கள்

அம்ரித் பாரத் ரயில்களை 10 மாதங்கள் வெற்றிகரமாக சோதனை செய்த பின்னர், மேலும் 50 ரயில்களைப் பெற பொது போக்குவரத்து நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "அம்ரித் பாரத் ரயில் என்ற பெயரில் புதிய ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. அம்ரித் பாரத் ரயில் முற்றிலும் ஏசி இல்லாதது. 22 பெட்டிகளில், 20 பயணிகளுக்கானது மற்றும் இரண்டு பார்சல்களுக்கானது. இந்த 20ல், 10 ஸ்லீப்பர் கோச்சுகளும், 10 ஜெனரல் கோச்சுகளும் இருக்கும்.

முற்றிலும் ஏழை பயணிகளுக்கானது

அம்ரித் பாரத் ரயில் என்பது குளிரூட்டப்படாத பெட்டிகளைக் கொண்ட LHB புஷ்-புல் ரயிலாகும். இந்த ரயிலில் சிறந்த முடுக்கத்திற்காக இரு முனைகளிலும் லோகோக்கள் உள்ளன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸைப் போன்றே இயங்கும் பொறிமுறை உள்ளது. ஆனால் இது முற்றிலும் பொது பயணிகளுக்கானது. பொது பயணிகளும், ரிசர்வ் செய்யாமல் திடீரென்று பயணம் செய்பவர்களும் முற்றிலும் இந்த அம்ரித் பாரத் ரயில்களால் பயன் பெறுவார்கள்.

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும்

தற்போது நான்கு அமிர்த பாரத் ரயில்கள் சேவையில் உள்ளன. அவை 15557/58 தர்பங்கா-ஆனந்த் விஹார் (டி) எக்ஸ்பிரஸ் மற்றும் 13433/13434 மால்டா டவுன் - சர் எம். விஸ்வேஸ்வரயா டெர்மினஸ் (பெங்களூரு) எக்ஸ்பிரஸ் ஆகும். கூடிய விரைவில் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அம்ரித் பாரத் ரயில்கள் அனைத்து வழிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

நீங்கள் எதிர்ப்பார்த்திடாத சேவைகள்

நவீன அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்ரித் பாரத் சேவைகள், ஜெர்க் இல்லாத பயணத்திற்கான அரை நிரந்தர இணைப்புகள், கிடைமட்ட நெகிழ் ஜன்னல்கள், மடிக்கக்கூடிய சிற்றுண்டி அட்டவணை மற்றும் பாட்டில் ஹோல்டர்கள், மொபைல் ஹோல்டர்கள் போன்ற மேம்பட்ட அம்சங்களைக் கொண்டதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ரயில்வே.ஆட்டோமேட்டிக் கப்ளர்கள், சிறந்த தரமான ரயில்கள், இருக்கைகள், சார்ஜிங் பாயிண்ட்கள், புதிய டாய்லெட் டிசைன்கள் மற்றும் சத்தம் இல்லாதது உள்ளிட்ட வந்தே பாரதில் உள்ள அதே தொழில்நுட்பம் இந்த அம்ரித் பாரத் ரயில்களிலும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

More News

    Read more about: indian railways irctc
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+