Search
  • Follow NativePlanet
Share
» »இனி இந்திய ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் இருக்காது – ரூ. 1 லட்சம் கோடியில் அசத்தல் திட்டம்!

இனி இந்திய ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் இருக்காது – ரூ. 1 லட்சம் கோடியில் அசத்தல் திட்டம்!

இந்திய மக்களின் உயிர்நாடி போக்குவரத்து என்றால் அது ரயில்கள் தான். சாமானிய மக்களால் அதிக தூரம் குறைந்த கட்டணத்தில் பயணிக்க வைப்பதனால் இந்திய ரயில்வே பெரும்பாலான மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது. ஆனால், இதில் பெரிய கஷ்டம் என்னவென்றால் அது வெயிட்டிங் லிஸ்ட் தான். நீண்ட காத்திருப்பு டிக்கெட்டுகள் பயணிகளுக்கு மட்டுமின்றி, ரயில்வே துறைக்கும் தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது காத்திருப்பு டிக்கெட் சிரமத்தை போக்க ரயில்வே புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி ரூ.1 லட்ச கோடி ருபாயில் முதலீட்டில் புதிய ரயில்களை வாங்க உள்ளது!

வெயிட்டிங் லிஸ்டால் அவதிப்படும் மக்கள்

பண்டிகை காலங்களில், ரயிலில் பயணம் செய்வது எளிதானது அல்ல. நெரிசல் மிகுந்த ரயில்களில், டிக்கெட்டுகள் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படுகின்றன. மக்கள் வீடுகளுக்குச் செல்ல உறுதியான / கன்பார்ம் டிக்கெட்டுகளைப் பெற முடியவதில்லை. காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. காத்திருப்பு டிக்கெட்டுகள் பயணிகளுக்கு மட்டுமின்றி, ரயில்வே துறைக்கும் தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது காத்திருப்பு டிக்கெட் சிரமத்தை போக்க ரயில்வே புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ரயில்வே 1 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க தயாராக உள்ளது.

irctcprojects

ரூ.1 லட்ச கோடியில் மெகா ப்ராஜெக்ட்

இந்திய ரயில்வே அடுத்த சில ஆண்டுகளில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் புதிய ரயில்களை வாங்க உள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி சமீபத்தில் தெரிவித்தார். அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பயணங்களின் எண்ணிக்கை மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான ரயில்கள் கிடைப்பதை அதிகரிக்க இது ஒரு பெரிய மேம்படுத்தலின் ஒரு பகுதியாகும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

உறுதியான டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள்

ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது இருக்கைகள் கிடைக்கும். ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, உறுதியான டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போது தினமும் 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில்வே தினமும் 10754 பயணங்களை இயக்குகிறது. ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பயணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

irctcmetroproject

7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் புதிய ரயில்கள்

இந்த திட்டத்தின் நோக்கம் பல ஆண்டுகளாக இயங்கும் பழைய ரயில்களின் இருப்புக்களை மாற்றுவதாகும். இந்தத் திட்டத்தின் மூலம், 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் புதிய ரயில்கள் ரயில்வேயில் சேர்க்கப்படும். அடுத்த சில ஆண்டுகளில் பழைய ரயில்களுக்குப் பதிலாக புதிய ரயில்கள் இயக்கப்படும் என்றார். அதே நேரத்தில், பயணிகளுக்கு போதுமான இருக்கைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முற்றிலுமாக வெயிட்டிங் லிஸ்டை நீக்க முடிவு

இந்திய ரயில்வே தற்போது தினசரி 10,754 ரயில் பயணங்களை இயக்குகிறது, மேலும் 3,000 ரயில்களை சேர்க்கும் திட்டம் காத்திருப்புப் பட்டியலை முற்றிலுமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "பயணிகள் பிரிவுகளில் காத்திருப்புப் பட்டியல்களின் சிக்கலைத் தீர்க்க, அதிக தேவை உள்ள மாதங்களில் தவிர, இந்த பத்தாண்டுகளின் முடிவில் பயணங்களை 30 சதவிகிதம் அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம்" என்று வைஷ்ணவ் கூறினார்.

காத்திருப்பு டிக்கெட் பிரச்னை நிச்சயம் முடிவுக்கு வரும்

ஆண்டுக்கு 700 கோடி பேர் ரயிலில் பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டுக்குள் 1000 கோடியை எட்டும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ரயில்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியது அவசியம். ரயில்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் உயர்த்தினால், ரயில்வேயில் காத்திருப்பு டிக்கெட் பிரச்னை முடிவுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

More News

Read more about: irctc indian railways
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+