Search
  • Follow NativePlanet
Share
» »கொடைக்கானலில் இந்தியாவின் முதல் டபுள் கிளாஸ் க்ளாம்ப் திறப்பு...அடுத்த முறை அவசியம் போய் பாருங்க

கொடைக்கானலில் இந்தியாவின் முதல் டபுள் கிளாஸ் க்ளாம்ப் திறப்பு...அடுத்த முறை அவசியம் போய் பாருங்க

இயற்கையின் மடியில் ஆடம்பரமாக ஓய்வெடுக்க விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக கொடைக்கானலில் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானலில் Luxeglamp நிறுவனம் புதிய அளவிலான அனுபவத்தை சுற்றுலா அனுபவத்தை இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதற்காக, Luxe Chateau எனும் இந்தியாவின் முதல் இரட்டை கண்ணாடி க்ளாம்ப் (Double-Glass Glamp)திறந்துள்ளது.

Luxeglamp

Luxe Chateau, என்பது கிட்டதட்ட அரண்மனை போன்ற வசதிகளுடன் இருக்கும் தனித்துவமான தங்கும் வசதி கொண்ட வீடுகள் ஆகும். ஓட்டல்களில் இருப்பது போன்ற அனைத்து வசதியும், ஆனால் தனி வீட்டில் இருப்பது போன்ற அனுபவத்துடன் வழங்கக் கூடியதாகும். இது பிரெஞ்சு நாட்டில் மிகவும் பிரபலமானதாகும். ஒரு தனித்துவமான க்ளாம்பிங் அனுபவத்தை தரக் கூடியதாகும். Luxe Chateau,பாரம்பரிய விடுதி மற்றும் ரிசார்ட்டுகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்துடன் கொடைக்கானலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Luxe Chateau சிறப்பம்சங்கள்:

* இரட்டை கண்ணாடி அமைப்பு - 360° பார்வையில் இயற்கையை ரசிக்கும் அனுபவத்தை வழங்குகிறது.
* சூரிய ஒளி கட்டுப்பாடு - அதிக வெப்பத்தை தடுக்க உதவுகிறது.
* வெப்ப சீராக்கம் மற்றும் காற்று எதிர்ப்பு - எல்லா காலநிலையிலும் வசதியான அனுபவம்.
* நட்சத்திரங்களின் கீழ் தூங்கும் அனுபவம் - இரவில் வெளிச்சமில்லாமல் முழுமையாக காணக்கூடிய வானத்தை பார்க்கும் வசதி.
* சுற்றுச்சூழல் நட்பு வசதிகள் - இயற்கையை பாதிக்காமல் சுற்றுலா அனுபவம்.

விருந்தினர்களுக்கு ஏற்கனவே பிரபலமாகி வரும் Luxe Chateau பற்றி Luxeglamp நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன்டனி தாமஸ் கூறுகையில், "விருந்தினர்களுக்கு இயற்கையை அனுபவிக்க, அதே நேரத்தில் வசதியாக இருக்க ஒரு புதிய முயற்சியாக இதை உருவாக்கியுள்ளோம். Luxe Chateau, விருந்தினர்களுக்கு நட்சத்திரங்களின் கீழ் தூங்கவும், கொடைக்கானலின் அழகிய சூரிய உதயத்தை நேரடியாக அனுபவிக்கவும் உதவும்" என்றார்.

வசதிகள் மற்றும் சேவைகள் :

Luxe Chateau-வில் விருந்தினர்கள் அனுபவிக்கக்கூடிய வசதிகள்:

* தனிப்பட்ட டெக்குகள் - இயற்கையைப் பார்க்க தனியாக அமைந்த சிறப்பு பகுதி.
* தனியார் சூடான நீச்சல் குளம் (Hot Tub) - குளிர் காலத்திலும் சூடாக இருக்க.
* தனியார் சோனா - மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும்.
* வெளிப்புற உணவு அனுபவம் (Outdoor Dining) - நட்சத்திரங்களின் கீழ் மெழுகுவர்த்தி ஒளியில் உணவுகளை ரசிக்க.

Luxeglamp - எதிர்கால திட்டங்கள் :

Luxeglamp நிறுவனம் இந்தியாவில் க்ளாம்பிங் கலாச்சாரத்தை (Glamping Culture) வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது கொடைக்கானலில் துவக்கப்பட்டுள்ள Luxe Chateau, விரைவில் தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட பல இடங்களில் இதே மாதிரியான சிறப்பு க்ளாம்பிங் அனுபவங்களை வழங்க Luxeglamp திட்டமிட்டுள்ளது.

எப்படி முன்பதிவு செய்யலாம் ?

* இடம்: Luxe Chateau, Luxeglamp, கொடைக்கானல், தமிழ்நாடு.
* முன்பதிவு செய்ய: www.luxeglamp.com
* மதுரை விமான நிலையத்திலிருந்து சுமார் 3.5 மணிநேரப் பயணம்.
* கோயம்புத்தூர், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சுலபமாக அணுகக்கூடியது.

இயற்கையை நேசிக்கும் சுற்றுலா பயணிகள், ஆடம்பரமாகவும் அமைதியாகவும் ஓய்வெடுக்க விரும்புபவர்கள், Luxe Chateau நிச்சயம் ஒரு கனவு விடுதியாக அமையும். கொடைக்கானலின் இயற்கை அழகை முற்றிலும் அனுபவிக்க, இந்தியாவின் முதல் இரட்டை கண்ணாடி க்ளாம்ப்பை தேர்வு செய்யலாம். இங்கு ஆடம்பரமான வசதிகளை அனுபவித்த படியே இயற்கையான சூழலில் கேம்ப் அமைத்து தங்குவது போலவும், இயற்கையுடனேயே இணைந்து வாழும் அனுபவத்தையும் தரக் கூடியதாக இருக்கும்.

More News

Read more about: kodaikanal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+