Search
  • Follow NativePlanet
Share
» » இவ்வளவு உயரமான கிறிஸ்து சிலையின் மீது விழுந்த மின்னல் – கனவு போன்று இருக்கும் காட்சிகள்!

இவ்வளவு உயரமான கிறிஸ்து சிலையின் மீது விழுந்த மின்னல் – கனவு போன்று இருக்கும் காட்சிகள்!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரியோவில் அமைந்துள்ள 'கிறிஸ்ட் தி ரிடீமர்' (Christ the redeemer) அல்லது மீட்பராகிய கிறிஸ்து சிலைப் பற்றி ஏறக்குறைய நாம் எல்லோருமே அறிந்திருப்போம். ஆனால் இன்றைய தேதிக்கு இது தான் "டாக் ஆப் தி டவுன்", ஆம்! சமீபத்தில் இந்த 100 அடி உயரமுள்ள இயேசு கிறிஸ்துவின் சிலை மின்னலால் தாக்கப்பட்டபோது, கிட்டத்தட்ட சாத்தியமற்ற சாதனையாக, ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படம் கைப்பற்றப்பட்டது. அது பார்ப்பதற்கு மின்னல் என்னவோ இயேசுவின் கண்களில் இருந்து வானுக்கு செல்வது போன்று தெரிகிறது. அந்த தெய்வீக காட்சியைப் பற்றியும் அந்த சிலைக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றியும் தான் நாம் இந்தக் கட்டுரையில் காணப் போகிறோம்!

இயற்கை விஞ்சும் விஞ்ஞானம் இன்னும் பிறக்கவில்லை

இயற்கை விஞ்சும் விஞ்ஞானம் இன்னும் பிறக்கவில்லை

மனிதர்களாகிய நாம் அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என எல்லாவற்றிலும் வளர்ந்து வந்தாலும் என்றும் நம்மால் இயற்கை அன்னையை கணித்திட முடியாது. பல வித்தியாசமான அற்புதமான விஷயங்களை இயற்கை அன்னை நாள் தோறும் நடத்திக் கொண்டிருக்கிறாள், அதில் ஒன்று தான் இதுவும்! பிரேசிலில் ஏற்பட்ட திடீர் புயலின் போது மழையும் மின்னலும் அதிகமாக இருந்த நேரத்தில், ஃபெர்னாண்டோ ப்ராகா என்ற என்ற ஸ்பானிஷ் புகைப்படக் கலைஞர் 100 அடி உயரமுள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையை மின்னல் தாக்கியதை புகைப்படம் எடுத்திருந்தார்.

உலகெங்கிலும் வைரலான புகைப்படங்கள்

உலகெங்கிலும் வைரலான புகைப்படங்கள்

இணையத்தளத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட தருணத்தில் இருந்து லைக்ஸ்களும், ஷேர்களும், கமெண்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன. புகைப்படம் வெளியான எட்டு மணி நேரத்தில் இன்ஸ்டாகிராமில் 2.3 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை இது மல மலவென குவித்தது. உலகெங்கிலும் உள்ள பிரபலங்களும், புகைப்படக்காரர்களும், பொதுமக்களும் இந்த படைப்பை வெகுவாக ரசித்து பாராட்டி வருகின்றனர்.

ஆன்மீகவாதிகள் கொண்டாட்டம்

ஆன்மீகவாதிகள் கொண்டாட்டம்

உண்மையிலேயே கண்கவர் வகையில் இருக்கும் இந்த புகைப்படங்களை உலகெங்கிலும் உள்ள பல மதவாதிகளும் இந்த தருணத்தை சில தெய்வீக தலையீட்டின் அடையாளமாக விளக்குகிறார்கள். அதோடு அது பார்ப்பதற்கு மின்னல் என்னவோ இயேசுவின் கண்களில் இருந்து வானுக்கு செல்வது போன்று தெரிகிறது. இந்த தெய்வீக அடையாளம் எதற்காக, இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்ற ஒரு வாதமும் ஒரு புறம் சென்று கொண்டிருக்கிறது.

‘கிறிஸ்ட் தி ரிடீமர்’ சிலையைப் பற்றி நாம் அறிந்திராத விஷயங்கள்

‘கிறிஸ்ட் தி ரிடீமர்’ சிலையைப் பற்றி நாம் அறிந்திராத விஷயங்கள்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோர்கோவாடோ மலையின் உச்சியில் அமர்ந்திருக்கும் கிறிஸ்ட் தி ரிடீமர் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகவும் அடையாளம் காணக்கூடிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். ரியோ டி ஜெனிரோவில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஆனால் இந்த புகழ்பெற்ற சிலை பற்றி நமக்கு உண்மையில் எவ்வளவு தெரியும்? நீங்கள் அறிந்திராத பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!

o அட்லாண்டிக் காடுகளின் அடர்ந்த தாவரங்களால் மூடப்பட்டிருக்கும் 710 மீட்டர் கோர்கோவாடோ மலை உச்சியில் இந்த சிலையைக் கட்டி முடிக்க 9 ஆண்டுகள் ஆனது. 1922 இல் தொடங்கி, இறுதியாக 1931 இல் $250,000 US செலவில் முடிக்கப்பட்டது.

o 6 மில்லியன் சோப்ஸ்டோன்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும் இந்த சிலைக்கு உள் மறைக்கப்பட்ட செய்திகள் நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

o இப்போது புகைப்படம் எடுக்கபட்டிருக்கும் இந்த சிலை மீது இதே போல 2008 மற்றும் 2014 இல் இரண்டு முறை மின்னல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

o 52 மீட்டர் உயரத்தில் நிற்கும் போலந்தில் உள்ள கிறிஸ்து கிங் சிலை, பொலிவியாவில் உள்ள 40 மீட்டர் உயரம் கொண்ட கிறிஸ்டோ டி லா கான்கார்டியாவுக்கு அடுத்தபடியாக, இயேசு கிறிஸ்துவின் உயரமான சிலைகளில் இது 3 ஆவது இடம் பிடித்துள்ளது.

o ஜூலை 2007 இல், 'கிறிஸ்ட் தி ரிடீமர்' சிலை உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

o கிறிஸ்துவின் மீட்பர் உண்மையில் பிரேசிலில் கட்டப்படவில்லை. இது முதன்முதலில் பிரான்சில் பிரெஞ்சு சிற்பி பால் லாண்டோவ்ஸ்கி என்பவரால் தயாரிக்கப்பட்டது, அவர் களிமண் துண்டுகளில் சிலையை உருவாக்கினார். இவை பின்னர் பிரேசிலிய பொறியாளர் ஹெய்டர் டா சில்வா கோஸ்டா மற்றும் பிரெஞ்சு பொறியாளர் ஆல்பர்ட் காகோட் ஆகியோரால் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் மூலம் மறுஉருவாக்கம் செய்ய பிரேசிலுக்கு அனுப்பப்பட்டன.

o ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துவின் மீட்பர் சிலைக்கு கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். 2011 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது, ஒரே நாளில் 14,000 பார்வையாளர்கள் சிலையை பார்வையிட்டனர்.

More News

    Read more about: rio de janerio brazil
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+