• Follow NativePlanet
Share
» »காஷ்மீரில் காந்தி ஜெயந்தியன்று தொடங்கப்படவிருக்கும் முதல் மின்சார ரயில்!

காஷ்மீரில் காந்தி ஜெயந்தியன்று தொடங்கப்படவிருக்கும் முதல் மின்சார ரயில்!

அடுத்த முறை நீங்கள் காஷ்மீருக்கு செல்லும்போது ஒரு அழகிய ரயில் பயணத்தில் ஈடுபடலாம். காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றொரு மைல்கல்லை இந்த காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் தேதி கடக்கப் போகிறது!

ஆம்! ஜம்மு காஷ்மீ ரின் முதல் மின்சார ரயில் பனிஹால்-பாரமுல்லா காரிடார் ரயில் காந்தி ஜெயந்தி அன்று முதல் முறையாக இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அழகிய காஷ்மீரில் முதல் மின்சார ரயில்

அழகிய காஷ்மீரில் முதல் மின்சார ரயில்

பனி மூடிய சிகரங்கள், வெள்ளி போன்ற ஆறுகள், பள்ளத்தாக்குகள், பற்பல பழத் தோட்டங்கள் மற்றும் தால் ஏரி ஆகியவை உங்கள் மனதில் என்றென்றும் பதிந்துவிடும் அளவுக்கு அழகாக ஒரு படத்தை வரைகின்றன.

இனி நீங்கள், காஷ்மீருக்குச் செல்லும் போது இயற்கைக் காட்சிகளை ஆராய்வதற்கு ஒரு புதிய வழியில் இணையலாம். அக்டோபர் 2 ஆம் தேதி காஷ்மீர் மின்சார ரயிலைப் பெறத் தயாராக உள்ளது. ஜம்மு-காஷ்மீர் ரயில் இணைப்பில் 137 கிலோமீட்டர் நீளமுள்ள பனிஹால்-பாரமுல்லா வழித்தடத்தில் ரயில் இயங்கத் தொடங்கும் என்று மாநில அறிக்கைகள்

முடிவுக்கு வந்த ஐந்து ஆண்டுகள் பணி

முடிவுக்கு வந்த ஐந்து ஆண்டுகள் பணி

ஜம்மு காஷ்மீர் அரசு, இந்திய ரயில்வே மற்றும் இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் ஆகியவை ஆகஸ்ட் 2019 முதல் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தப் பணி தொடர்பான ஆய்வு செப்டம்பர் 26 அன்று செய்யப்பட்டது, மேலும் அக்டோபர் 2 இதன் முதல் சேவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி முதல் இந்த இரண்டு பாதைகளுக்கு இடையேயான பாதையில் பயணிகள் பயணிக்கலாம்.

ரயிலைப் பற்றி கூற வேண்டும் என்றால், காஷ்மீர் வடக்கு ரயில்வேயின் தலைமைப் பகுதி மேலாளர் சாகிப் யூசுப் "ஜம்மு காஷ்மீர் ரயில் துறையில் மின்சார ரயில் மூலம் தினமும் எத்தனை சேவைகள் நடத்தப்படும் என்பது முடிவு செய்யப்பட்டு வருகிறது. 324 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த ரயில்வே திட்டம், வழக்கமான ரயில்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

மாசுபாட்டைக் குறைக்கும் பிரத்யேக ரயில்

மாசுபாட்டைக் குறைக்கும் பிரத்யேக ரயில்

இந்த ரயில்களின் என்ஜின்கள் அதிக செயல்திறன் கொண்டவை, மேலும் அவை எரிபொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவையும் (மற்றும் கார்பன் தடம்) மிச்சப்படுத்துகிறது, மேலும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. மேலும், இந்த ரயில்கள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், ரயிலை இயக்கப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவும் குறைக்கப்படும்.

குளிர்காலம் மற்றும் கடுமையான பனிப்பொழிவு கூட இந்த ரயில் இயக்கத்தை தாக்கக்கூடாது என்பதற்காக, , ரயிலுக்கு தடையில்லா மின்சாரம்
வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, அதற்கென பிரத்யேக ஃபீடர்கள் வைக்கப்படும் என்றும் கூறினார்.

இனி நீங்கள், காஷ்மீர் செல்லும்போது இந்த மின்சார ரயிலில் பயணித்து காஷ்மீரின் அழகைக் காணலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+