Search
  • Follow NativePlanet
Share
» »கோவளத்தில் நடைபெறும் சர்வதேச இசை கச்சேரி – இப்போதே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!

கோவளத்தில் நடைபெறும் சர்வதேச இசை கச்சேரி – இப்போதே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!

இண்டிபென்டன்ட் இசை எனப்படும் சுயாதீன இசை அல்லது இண்டி இசை இப்போது உலக அளவில் மிகவும் பிரபலமாக ட்ரெண்டு ஆகி வருகிறது. கேரளாவில் நவம்பர் 9 முதல் 13 ஆம் தேதி வரை சர்வதேச இண்டி இசை விழா கேரள கலை மற்றும் கைவினைக் கிராமமான கோவளத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஐந்து நாள் திருவிழாவில் பங்கேற்க உங்கள் பேக் பேக்குகளை தயார் செய்து, இசை கச்சேரியில் கலந்துக் கொள்வதோடு அழகான கோவளத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள்!

இண்டிபென்டன்ட் இசை கச்சேரி

இண்டிபென்டன்ட் இசை கச்சேரி

சுதந்திர இசைக்கான சுருக்கமான இண்டி இசை கலாச்சாரம் இந்தியாவில் புதியது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நம்மிடம் பல ஆக்கப்பூர்வமான இண்டி இசைக்கலைஞர்கள் களத்தில் பெரிய பெயர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும், இந்தியாவில் இது ஆரம்ப நிலையில் தான் உள்ளது. கேரளா கலை மற்றும் கைவினைக் கிராமமான கோவளம் நவம்பர் 9 முதல் சர்வதேச இண்டி இசை விழாவை நடத்த தயாராகி உள்ளது.

இந்தியாவிலேயே இது தான் முதல் முறை

இந்தியாவிலேயே இது தான் முதல் முறை

சர்வதேச இண்டி இசை விழா கேரளாவில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதன்முறையாக நடத்தப்படுகிறது. இந்த இண்டி இசை விழா இனி கேரளாவில் ஆண்டுதோறும் நடைபெறும், இந்த வருடம் நடைபெறுவதே இதன் தொடக்கமாகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கலைஞர்களை இணைத்து, நாட்டிலேயே முதன்முறையாக நடத்தப்படும் விழாவாக இது இருக்கும். மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த இசைத் திருவிழா இந்த வருடம் துவங்கப்பட்டுள்ளது.

பங்குக்கொள்ளும் வெளிநாட்டு இசைக் கலைஞர்கள்

பங்குக்கொள்ளும் வெளிநாட்டு இசைக் கலைஞர்கள்

இந்த விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 21 இசைக் குழுக்கள் பங்கேற்கவிருப்பதால் கேரள கலை மற்றும் கைவினைக் கிராமமான கோவளம் இந்த வாரம் முழுவதும் மிகவும் பிஸியாக இருக்கும். இவ்விழாவில் ஏழு சர்வதேச இசைக்குழுக்களும் பதினான்கு இந்திய இசைக் குழுக்களும் பங்கேற்கின்றன. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த வில் ஜான்ஸ் மற்றும் சாமி சோஃபி, மலேசியாவைச் சேர்ந்த லியா மெட்டா, பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த அன்ஸ்லோம், சிங்கப்பூரிலிருந்து ருத்ரா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ரோக் ஃப்ளவர்ஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழா இசை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பிரபலமான இந்திய இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இசைக் கச்சேரி

பிரபலமான இந்திய இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இசைக் கச்சேரி

மும்பையின் ஷெரிஸ், ஆர்கிலிஃப், வென் சாய் மெட் டோஸ்ட், ஹரிஷ் சிவராமகிருஷ்ணனின் அகம், ஸ்க்ரீன் 6, சித்தாரா கிருஷ்ணகுமாரின் ப்ராஜெக்ட் மலபாரிகஸ், ஊரளி, ஜாப் குரியன், கேயாஸ், லேஸி ஜே, சந்தனா ராஜேஷ், தாமரசேரி சுரம், தேவன் ஏகாம்பரம் மற்றும் இன்னர் சாங்க்டம் ஆகியோர் இந்தியா சார்பில் இருந்து கலந்துக் கொள்ளும் இசைக் கலைஞர்கள் ஆவார்கள்.

கட்டாயம் நீங்கள் ஏன் இதில் பங்குக் கொள்ள வேண்டும்

கட்டாயம் நீங்கள் ஏன் இதில் பங்குக் கொள்ள வேண்டும்

இந்த இசைக்குழுக்களில் பலவற்றின் பெயர்களை நீங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வாயிலாக பரவலாக கேள்விப்பட்டு இருப்பீர்கள். இப்போது அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் இசையில் கரைய ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் கட்டாயம் தவறவிடக்கூடாது.

முதன்முறையாக இந்தியாவில் இப்படி ஒரு திருவிழா நடக்கிறது. திருவிழாவில் இண்டி பாப், ஹிப்-ஹாப், பாப்-ராக், த்ராஷ் மெட்டல் மற்றும் ரெக்கே போன்ற வகைகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறும். எனவே, புதிய யுக இசை மற்றும் கலை உலகில் உங்களை மூழ்கடிப்பதற்கு இப்போதே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, கச்சேரியில் ஆரவாரமாக கலந்துக் கொள்ளுங்கள்.

More News

Read more about: kovalam kerala
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+