Search
  • Follow NativePlanet
Share
» »கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகே புதிதாக ரயில் நிலையம் – இனி மக்களுக்கு பிரச்சினை இல்லை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகே புதிதாக ரயில் நிலையம் – இனி மக்களுக்கு பிரச்சினை இல்லை!

சென்னையின் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (KCBT) திறக்கப்பட்ட நாளில் இருந்தே பலதரப்பட்ட கருத்துகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பேருந்து நிலையம் சென்னை நகரில் இருந்து எங்கோ உள்ளது, பேருந்து நிலையத்திற்கு அருகில் ரயில் நிலையங்கள் இல்லை, ஆட்டோ கட்டணம் அதிகமாக உள்ளது என்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் தடையின்றி KCBT அருகே புதிய ரயில் நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது!

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்

வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எதிர்கொள்ளும் ஜிஎஸ்டி சாலையில், புதிய ரயில் நிலையத்திற்கான கட்டிடங்கள் மற்றும் நடைமேடைகள் கட்டுவதற்கான பணி சமீபத்தில் தொடங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய ரயில் நிலையம் தயாராகிவிடும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

kilambakkamsoontohaveaseparaterailwaystation2

ரயில்வே நிலையம் to பேருந்து நிலையம் ஸ்கைவாக்

மேலும், கிளாம்பாக்கம் டெர்மினஸை புதிய ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் 450 மீட்டர் நீளமுள்ள ஸ்கைவாக்கிற்கான சீரமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஸ்கைவாக் கட்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

கூடிய விரைவில் தயாராகும் ரயில் நிலையம்

புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானச் செலவுக்காக, தெற்கு ரயில்வேக்கு, 20 கோடி ரூபாயை, மாநில அரசு ஏற்கனவே மாற்றியது. "நிலையத்தின் வரைபடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் நிலைய கட்டிடங்கள், தளங்கள், தங்குமிடங்கள், எஸ்கலேட்டர்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கான அடித்தள வேலைகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. கூடிய விரைவில் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்," என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினசரி 1.5 லட்சம் பயணிகளுக்கு பலன்

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மூன்று தளங்களைக் கொண்டிருக்கும்; ஒவ்வொன்றும் 12-கார் எலக்ட்ரிக்கல் மல்டிபிள் யூனிட் (EMU) ரயில்களுக்கு இடமளிக்கும் திறன் கொண்டது. ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தின்படி, கிளாம்பாக்கம் KCBT தினசரி 1.5 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

kilambakam railways

நீட்டிக்கபட்ட ரயில் சேவைகள்

ஏற்கனவே கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு (KCBT) செல்வோரின் நலன் கருதி, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை புறநகர் ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 10 ரயில் சேவைகளின் நீட்டிப்பு பிப்ரவரி 26 திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

சென்னை கடற்கரை to கூடுவாஞ்சேரி ரயில் சேவை நீட்டிப்பு

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஐந்து ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து இரவு 7.20 மணி, 8.15 மணி, 8.45 மணி, 8.55 மணி மற்றும் 9.40 மணி ஆகிய ஐந்து ரயில் சேவைகள் இயக்கப்படும். இதேபோல், கூடுவாஞ்சேரியில் இரவு 8.55, 9.45, 10.10, இரவு 10.25, மற்றும் இரவு 11.20 மணிக்கு ரயில்கள் திரும்பும்.

ஆகஸ்ட் மாதம் முதல் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இயங்கும்

தற்போதைக்கு ரயில்கள் இயக்கப்பட்டாலும் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் KCBTயில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்படும் பணியும் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது!

More News

    Read more about: chennai kilambakkam
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+