Search
  • Follow NativePlanet
Share
» »வந்தாச்சு இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்லீப்பர் ஏசி பஸ்...எந்த ஊரில் ஓடுது தெரியுமா ?

வந்தாச்சு இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்லீப்பர் ஏசி பஸ்...எந்த ஊரில் ஓடுது தெரியுமா ?

உலகமெங்கும் காற்று மாசுபாடு காரணமாகவும் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாகவும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று போக்குவரத்து வாகங்களிருந்து வரும் புகையாகும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பொது போக்குவரத்தில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டயத்தில் இருந்து வருகிறோம். பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பல முன்னணி மோட்டார் வாகன நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இந்நிலையில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பொது போக்குவரத்தான பேருந்து சேவையில் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தபட்டுள்ள மின்சார ஏசி ஸ்லீப்பர் பேருந்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

electric sleeper ac bus

மும்பையை தலைமையிடமாக கொண்டுள்ள Nuego நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் மின்சார ஏசி ஸ்லீப்பர் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேருந்துகள் நீண்ட தூரம் பயணிக்கும் வகையிலும், சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மின்சார ஸ்லீப்பர் பேருந்துகள் டெல்லி - அமிர்தசரஸ், பெங்களூரு- சென்னை, ஹைதராபாத்-ராஜமுந்திரி, சென்னை- மதுரை, விஜயவாடா- விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு- மதுரை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றது.

Nuego மின்சார ஸ்லீப்பர் பஸ்சில் செய்யப்பட்டுள்ள வசதிகள் :

1. சிறந்த விசாலமான படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைகள் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும்.

2. ஒவ்வொரு இருக்கையிலும் LED விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

3. ஒவ்வொரு பெர்த்திலும் USB சார்ஜிங் போர்ட், இரவு வாசிப்பு விளக்குகள் மற்றும் ஸ்டோரேஜ் வசதி போன்றவை உள்ளன.

4. பயண சாமான்கள் வைப்பதற்கு போதுமான வசதிகள் உள்ளன.

5. நவீன வசதிகளுடன் கூடிய இந்த பேருந்து பயணம் சுகாதாரமும், பாதுகாப்பும் கொண்ட சிறந்த பயணத்தை வழங்குகிறது.

முக்கிய அம்சங்கள்:

இந்த பேருந்துகள் மேம்பட்ட செயல்திறனுக்கான இந்தியாவில் முதன் முறையாக aerodynamic FRP front fasica மற்றும் Monocoque chasis போன்ற அதி நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ABS ப்ரேக் வசதியுடன் எலெக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (ECS) வசதியும் உள்ளது. இந்தியாவின் சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையில் மின்சார மற்றும் நிலையான போக்குவரத்துக்கு ஏற்ப முக்கிய நகரங்களுக்கு இடையே மின்சார பேருந்து சேவை மேற்கொள்ளபட்டுவிருக்கிறது.

இந்நிலையில் Nuego போன்ற நிறுவனங்கள் 0% உமிழ்வு மின்சார பேருந்துகளை அறிமுகபடுத்தி, காற்று மாசுபாடு மற்றும் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் முன்னணியில் உள்ளன. இந்த பேருந்துகள் மீளுருவாக்கம் செய்யப்பட்ட பிரேக்கிங், வேகமான சார்ஜிங் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட வடிவமைப்புகள் போன்ற அம்சங்களுடன் அமைதியான மென்மையான பயணங்களை வழங்குகின்றன.

முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்கள், வசதியான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புள்ள பயணத்தை வழங்குகிறது. காலநிலை மாற்றம் மற்றும் நகர்ப்புற மாசுபாடு காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்க இந்த மின்சார இன்டர்சிட்டி பேருந்துகள் டீசல் மூலம் இயங்கும் போக்குவரத்திற்கு மாற்றாக உள்ளன. மேலும் பயணிகளின் வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வேளையில் பசுமையான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க இந்த புதிய மின்சார பேருந்துகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

More News

    Read more about: electric bus
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+