Search
  • Follow NativePlanet
Share
» » பக்ரீத் வந்துவிட்டதே! அன்று களைக்கட்டி இருக்கும் இந்த இடங்களை பார்வையிட வேண்டாமா?

 பக்ரீத் வந்துவிட்டதே! அன்று களைக்கட்டி இருக்கும் இந்த இடங்களை பார்வையிட வேண்டாமா?

இஸ்லாமியர்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் இந்த வருடம் ஜூலை 9 முதல் 1௦ வரை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் மாதத்தின் இறுதியில் வரும் ஈத்-உல்-பித்ருக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இப்ராஹீம் நபியுடன் தொடர்புடைய இந்த பக்ரீத் பண்டிகை பக்ரி ஈத், ஈத் குர்பான், ஈத் அல்-அதா அல்லது குர்பான் பயராமி என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை அன்று அவர்களால் முடிந்த அளவு, கால்நடைகளை தியாகம் செய்கின்றனர்.

ஆன்மீக ஆசீர்வாதங்களைப் பெறவும், முந்தைய பாவங்கள் அனைத்தையும் போக்கவும் முஸ்லிம்கள் ஹஜ் மாதத்தில் புனித யாத்திரையை அனுசரிக்கின்றனர்.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் இந்த தியாக திருநாள் அன்று இந்தியாவில் பல இடங்களில் கொண்டாட்டம் நிறைந்து இருக்கும். அந்த இடங்களின் லிஸ்ட் இதோ!

ஜமா மஸ்ஜித், டெல்லி

ஜமா மஸ்ஜித், டெல்லி

1956 இல் ஷாஜஹானால் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான ஜமா மஸ்ஜித் இந்தியாவிலும் உலகிலும் மிகவும் பிரபலமான மசூதிகளில் ஒன்றாகும். இந்தியாவின் மிகப்பெரிய மசூதியாகக் கருதப்படும் ஜமா மஸ்ஜித், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பார்க்க வேண்டிய இடங்களில் முதன்மையானது. தொழுகையின் போது சுமார் 25,000 பக்தர்களுக்கு இடமளிக்கும் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மசூதி, டெல்லி ஜமா மஸ்ஜித் உலகின் மிகவும் பிரபலமான முஸ்லீம் மத தளங்களில் ஒன்றாகும்.
மினாரட்டுகள், குவிமாடங்கள், வளைவுகள் மற்றும் கதவுகள் மீது ஈர்க்கக்கூடிய விவரங்களுடன் இந்த மசூதி நான்கு பிரமாண்டமான கோபுரங்கள், மூன்று பெரிய வாயில்களைக் கொண்டுள்ளது. சிவப்பு மணற்கல் மற்றும் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்த மசூதியில் ஒவ்வொரு குவிமாடமும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டது. பேரரசரும் அவரது அரசவையினரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'ஜும்மே கி நமாஸில்' கலந்துகொள்வதற்காக மசூதிக்குச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

ஹாஜி அலி தர்கா, மும்பை

ஹாஜி அலி தர்கா, மும்பை

ஹாஜி அலி இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு ஒரு அற்புதமான உதாரணம் மற்றும் இந்தியாவில் ஈத் கொண்டாட்டத்திற்கான சிறந்த இடங்களில் ஒன்றாகும். அரபிக்கடலின் கரையில் பெருமையுடன் நிற்கும் இந்த மசூதி வெள்ளைக் குவிமாடங்கள் மற்றும் மினாராக்களைக் கொண்டு நம்மை பிரமிக்க வைக்கிறது. இஸ்லாமிய புனிதரான பீர் ஹஸ்ரத் ஹாஜி அலி ஷா புகாரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயத்திற்கு மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.
சிலர் தங்கள் மத நம்பிக்கைக்காக இந்த இடத்திற்கு வருகிறார்கள், சிலர் அந்த இடத்தின் காட்சி அழகைக் காணுவதற்காக வருகிறார்கள். இங்கு பிரார்த்தனை செய்பவர் ஏமாற்றம் அடைவதில்லை என்பது ஐதீகம். ஈத் பண்டிகையின் போது ஏராளமான மக்கள் ஹாஜி அலிக்கு வருகை தந்து, தங்கள் இதயங்களில் நீண்டகாலமாக தேக்கி வைத்திருக்கும் எண்ணங்களை மசூதியில் கோரிக்கையாக ஒப்படைக்கிறார்கள்.

மெக்கா மஸ்ஜித், ஹைதராபாத்

மெக்கா மஸ்ஜித், ஹைதராபாத்

இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான மெக்கா மஸ்ஜித் 1694 ஆம் ஆண்டு மெக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண் மற்றும் செங்கற்களால் ஆனது. 75 அடி உயரமும், 220 அடி அகலமும், 180 அடி நீளமும் கொண்ட இந்த மசூதியின் கட்டுமானத்தை முடிக்க 77 ஆண்டுகள் ஆனது. இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை அமர்ந்து தொழுக முடியும்.
மசூதியில் ஐந்து வழிப்பாதைகள், வளைவு காட்சியகங்கள், எண்கோண பால்கனிகள் ஒவ்வொன்றிற்கும் மேலே ஒரு சிறிய குவிமாடத்துடன் நான்கு மினாரட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. மசூதியானது மலர் உருவங்கள் மற்றும் ஓவியங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பல வளைவுகளில் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பக்ரீத் அன்று மெக்கா மஸ்ஜித் முழுவதும் விழாக்கோலம் பூணும், முழு மசூதியும் பிரார்த்தனைகளின் மையமாக மாறும். விருப்பங்களைப் பரிமாறிக் கொள்ளவும், சுவையான சுத்த குர்மாவைப் பகிர்ந்து கொள்ளவும் மக்கள் இங்கு கூடுகிறார்கள்.

ஹஸ்ரத்பால் (எ) ஜாமியா மஸ்ஜித், ஸ்ரீநகர்

ஹஸ்ரத்பால் (எ) ஜாமியா மஸ்ஜித், ஸ்ரீநகர்

ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஹஸ்ரத்பால் ஆலயம் காஷ்மீரின் மிக முக்கியமான இஸ்லாமிய தலமாகும். நபிகள் நாயகத்தின் புனித நினைவுச்சின்னமான ஹஸ்ரத்பாலில் பெருந்திரளான மக்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்கின்றனர்.
ஈத் தினத்தன்று ஜாமியா மஸ்ஜித் முழுவதும் பண்டிகைக் கோலம் பூண்டு இருப்பதோடு மக்களால் நிரம்பி வழிகின்றது. இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 33,000 பேர் வரை தொழுக முடியும்.

 நாகூர் தர்கா, தமிழ்நாடு

நாகூர் தர்கா, தமிழ்நாடு

நாகூர் தர்கா தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கடற்கரை நகரமான நாகூரில் அமைந்துள்ளது. நாகூர் நகரில் அமைந்துள்ள இந்த தர்கா ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய ஆலயமாகும். இந்த மரியாதைக்குரிய தர்கா நாகூர் தர்கா, நாகூர் ஆண்டவர் தர்கா அல்லது சையத் ஷாகுல் ஹமீது தர்கா என்றும் அழைக்கப்படுகிறது.
16 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரின் மன்னராக இருந்த அச்சுதப்ப நாயக்கரின் நோயை துறவி குணப்படுத்திய பிறகு, ஷாஹுலின் முழு பரிவாரங்களுக்கும் சுமார் 200 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். நாகூர் தர்கா சூஃபி துறவியான ஷாகுல் ஹமீதின் கல்லறையின் மேல் கட்டப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகை என்பது மனிதநேயம், அன்பு, பச்சாதாபம், நட்பு மற்றும் சமூகத்தின் அடிப்படைகளில் ஈடுபடுவதற்கான நேரம். எல்லா வெறுப்புகளையும் மறந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டிய நேரம் இது. எனவே, பக்ரீத் பண்டிகையை நீங்கள்எங்கு கொண்டாடப் போகிறீர்கள்?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+