• Follow NativePlanet
Share
» »லக்னோ உயிரியல் பூங்காவில் நைட் சஃபாரி – இனி இரவிலும் விலங்குகளைக் கண்டு ரசிக்கலாம்!

லக்னோ உயிரியல் பூங்காவில் நைட் சஃபாரி – இனி இரவிலும் விலங்குகளைக் கண்டு ரசிக்கலாம்!

லக்னோ உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் நூற்றாண்டு பழமையான நவாப் வாஜித் அலி ஷா உயிரியல் பூங்காவை குக்ரைல் வனப்பகுதிக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். வனப்பகுதியில் இரவு நேர சஃபாரிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுச்சூழல் சுற்றுலாவைப் பற்றிய விழிப்புணர்வு உலகெங்கிலும் வளர்ந்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இயற்கை வளங்களையும், வன விலங்குகளையும் காக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் உத்தரபிரதேச அரசு குர்கைலில் விலங்கியல் பூங்கா அமைக்க அனுமதி அளித்துள்ளது.

குக்ரைலுக்கு மாற்றப்படும் லக்னோ உயிரியல் பூங்கா

குக்ரைலுக்கு மாற்றப்படும் லக்னோ உயிரியல் பூங்கா

நெரிசல் மிகுந்த நர்ஹி பகுதியில் விலங்கியல் பூங்கா அமைந்து இருப்பதால் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் இந்த நடவடிக்கையை ஒரு லட்சியத் திட்டம் என்று குறிப்பிட்டார், மேலும் கணக்கெடுப்பு மற்றும் செலவு மதிப்பீட்டைச் செய்ய ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார் என்றும் கூறினார்.

குக்ரைலில் நைட் சஃபாரி மற்றும் லக்னோ உயிரியல் பூங்காவை நிறுவுவதற்கு, தற்போது பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி பகுதிகள் மட்டுமே, தற்போதுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் முடிந்தவரை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

சுற்றுச்சூழல் சுற்றுலா

சுற்றுச்சூழல் சுற்றுலா

இந்த நடவடிக்கை மாநிலத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், கலாச்சாரம், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்தவும் வருகிறது.

கூடுதலாக, சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் குக்ரைல் வனப்பகுதிக்கு அருகில் நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்படும்.

குக்ரைல் நதி ஒரு சுற்றுலா தலமாக உருவாக்கப்படும். சுற்றுச்சூழல் மற்றும் வனம் தொடர்பான அந்தந்த அதிகாரிகளுடன் உரிய ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சரவைக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் திட்டச் செலவு முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் சுமார் 56 சுற்றுச்சூழல் சுற்றுலாத் தளங்களை அடையாளம் கண்டுள்ளது மற்றும் இந்தத் துறையை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றும்.

உயிரியல் பூங்காவில் நைட் சஃபாரி

உயிரியல் பூங்காவில் நைட் சஃபாரி

ஏற்கனவே உள்ள அடர்ந்த 2,027 ஹெக்டேர் காடுகளுக்கு எந்தவித இடையூறு ஏற்படாத வகையில் 350 ஏக்கரில் நைட் சஃபாரிக்கான வனப்பகுதி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு சஃபாரி மூலம் விலங்கியல் பூங்காவின் பாதைகளை ஆராய்வது, இயற்கையைப் புரிந்துகொள்வதற்கும், வனவிலங்கு பாதுகாப்புகள் மற்றும் காடுகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

இதன் மூலம் விலங்கு பிரியர்களும் புதிய இடத்தில் உலகத்தரம் வாய்ந்த இரவு சஃபாரியை அனுபவிக்க முடியும்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+