Search
  • Follow NativePlanet
Share
» »ரயில்களை நாசம் செய்யும் கும்பமேளா பக்தர்கள் – இதன் பெயர் தான் பக்தியா?

ரயில்களை நாசம் செய்யும் கும்பமேளா பக்தர்கள் – இதன் பெயர் தான் பக்தியா?

பக்தி மார்க்கம் என்பது நம்மை நெறிமுறையுடன் வாழ்வதற்கும், ஒழுக்கமான பாதையில் செல்வதற்கும் வழிவகை செய்யும் ஒரு தூண்டுகோலே தவிர நம்மை மிருகத்தனமாக மாற்றுவதற்கு அல்ல. கடந்த மாதம் துவங்கப்பட்ட கும்பமேளா 2025 இல் கலந்து கொள்ள எண்ணற்ற பக்தர்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வந்தனர். இந்த கும்பமேளா முடிவதுற்குள் எத்தனை ரயில்கள் சேதமடையுமோ என்று நமக்கு இன்னமும் தெரியவில்லை. பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் பல ரயில்கள் பக்தர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன!

Train

புராணத்துடன் தொடர்புடைய கும்பமேளா

மகா கும்பமேளா பண்டைய காலங்களில் தொடங்கியதாக நம்பப்படுகிறது, அதன் தோற்றம் இந்து புராணங்களில் வேரூன்றியுள்ளது. தேவர்கள் அமிர்தத்தை எடுக்க கடலை கடைந்த போது, அமிர்தத்தின் துளிகள் நான்கு இடங்களில் விழுந்தன: பிரயாகராஜ், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் என நான்கு புனித இடங்கள் உருவாகின என்றும், அதனை நினைவு கூறும் விதமாக வரும் கும்பமேளாவில் கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் ஒன்று கூடும் இடத்தில் ஸ்நானம் செய்தால் நாம் செய்த பாவங்கள் கழிந்து, மோட்ஷம் கிடைக்கும் என்பது இந்துக்கள் நம்பிக்கை ஆகும்.

பிரயாக்ராஜ் நோக்கி வரும் கட்டுக்கடங்காத கோட்டம்

அலகாபாத் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா 2025 ஜனவரி 13, 2025 அன்று மகர சங்கராந்தி அன்று முதல் ஷாஹி ஸ்நானம் உடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளைக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர். தினமும் சுமார் 7-8 லட்ச பக்தர்கள் இந்த இடத்திற்கு வருகை தருவதால், பிரயாக்ராஜே திக்கு முக்காடி நிற்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இன்னமும் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை, அலகாபாத் நோக்கி வரும் ரயில்கள் பலவும் கும்பமேளா பக்தர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன.

Train

முன் ஏற்பாடு செய்தும் சற்றும் போதவில்லை

ஜனவரி 13 ஆம் தேதி நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு, 3,000 சிறப்பு ரயில்கள் உட்பட 13,000 க்கும் மேற்பட்ட ரயில்கள், பக்தர்களின் கணிக்கப்பட்ட வருகையை நிர்வகிக்க முக்கிய நகரங்களை பிரயாக்ராஜுடன் இணைக்க திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், இந்த விரிவான போக்குவரத்து சேவைகளின் வரம்புகளை கூட அதிகப்படியான கூட்டம் சோதித்து வருகிறது. எத்தனை ரயில்கள் இயக்கினாலும், பேருந்துகள் இயக்கினாலும் கும்பமேளா பக்தர்களுக்கு போதவே இல்லை.

ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்ளும் பக்தர்கள்

சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் இந்த நேரத்தில் பயணத்தின் கொடூரமான யதார்த்தத்தைக் காட்டுகின்றன. ரயில்களில் பயணிகள் நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு வீடியோவில், ஒவ்வொரு அங்குல இடத்திலும் பயணிகள் நிரம்பியிருக்கும் ஒரு நெரிசலான ரயிலைக் காட்டியது, சிலர் தரையில் அமர்ந்திருக்கிறார்கள், மற்றவர்கள் ஒரு பயணிக்காக ஒதுக்கப்பட்ட பெர்த்தை பல பேர் அமர்ந்திருப்பதை காண்பிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், இடமின்மை காரணமாக மக்கள் மேல் பெர்த்களில் கூட தங்கள் கால்களை பக்கவாட்டு பெர்த்களில் தொங்கவிட்டபடி கொண்டு செல்லப்பட்டனர்.

Train

நெரிசலால் தவித்து வரும் பயணிகள்

ரயிலுக்குள் இருக்கும் குழப்பம் தெளிவாகத் தெரிகிறது. இடைகழிகள் நெரிசலில் இருந்ததால் பயணிகள் நிற்க முடியாமல் போனது, மேலும் நெரிசலான பெட்டிகளில் செல்ல விற்பனையாளர்கள் சிரமப்பட்டனர். கழிப்பறைகளுக்கு அருகில் மக்கள் கூடி, பாதையைத் தடுத்து, யாரும் அவர்களை அணுக முடியாதபடி செய்ததும் காணப்பட்டது. ஒரே இருக்கையில் ஆறு பேர் வரை நெரிசலில் சிக்கியதால், ரயில் பயணம் ஒரு முழுமையான தொந்தரவாக மாறியுள்ளது.

சூறையாடப்படும் ரயில்கள்

காசு கொடுத்து டிக்கெட் பண்ண பயணிகள், ரயிலில் ஏற முடியாமல் தவித்து வருகின்றனர். ஏசி பெட்டிகளில் அமர்ந்து இருக்கும் பயணிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. ஏசி பெட்டிகளின் ஜன்னலை உடைத்து நொறுக்கி, ஜன்னல் வழியாக கூட்டம் கூட்டமாக ஏறுகின்றனர். இதனால் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் மிகவும் ஆபத்துக்கு உள்ளாகுகிறார்கள். இவை அனைத்தும் ஏற்படுவதற்கு காரணம் கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் தான்.

இப்படி மிருகத்தனமாக மக்களுக்கும், பொது உடமைக்கும் சேதம் விளைவித்து நெறி இல்லாமல் பயணம் செய்வதன் பெயர் தான் பக்தியா?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+