Search
  • Follow NativePlanet
Share
» » லட்சத்தீவின் மினிகாய் மற்றும் கட்மத் கடற்கரைக்கு கிடைத்து இருக்கும் உலகத்தர அங்கீகாரம்!

லட்சத்தீவின் மினிகாய் மற்றும் கட்மத் கடற்கரைக்கு கிடைத்து இருக்கும் உலகத்தர அங்கீகாரம்!

லட்சத்தீவில் அமைந்துள்ள மினிகாய் துண்டி கடற்கரை மற்றும் காட்மட் கடற்கரை ஆகிய இரண்டு இந்திய கடற்கரைகள் சர்வதேச சுற்றுச்சூழல் லேபிலான 'ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன்' பெற்றுள்ளதாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது உண்மையிலேயே இந்தியாவிற்கு ஒரு பெருமிதமான தருணமாகும். பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலைப் பகிர்ந்து, லட்சத்தீவு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன் கடற்கரைகள்

இந்தியாவில் உள்ள ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன் கடற்கரைகள்

உலகின் தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் சுற்றுச்சூழல் லேபிலான நீலக் கொடி சான்றிதழைப் பெற அந்தக் கடற்கரை பசுமை. தூய்மை மற்றும் சுகாதாரத்தில் முதன்மை வகிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சிவராஜ்பூர்-குஜராத், கோக்லா-டியு, காசர்கோடு மற்றும் படுபித்ரி-கர்நாடகா, கப்பாட்-கேரளா, ருஷிகொண்டா- ஆந்திரா, கோல்டன்-ஒடிசா, ராதாநகர்- அந்தமான் மற்றும் நிக்கோபார், தமிழகத்தின் கோவளம் மற்றும் புதுச்சேரியின் ஈடன் ஆகியவை ஏற்கனவே 'ப்ளூ ஃப்ளாக் சர்டிபிகேஷன்' பெற்ற கடற்கரைகளாகும்.

அழகிய மினிகாய் தண்டி கடற்கரை

அழகிய மினிகாய் தண்டி கடற்கரை

மினிகாய் தீவின் தண்டி கடற்கரை லட்சத்தீவு தீவுக்கூட்டத்தில் உள்ள மிகவும் அழகிய மற்றும் கண்கவர் கடற்கரைகளில் ஒன்றாகும். இந்த கடற்கரையின் தெளிவான நீல நீரும் அதனை ஒட்டியப் பகுதிகளும் வெள்ளை மணலும் மிகவும் ரம்மியமாக இருக்கிறது. கடலுக்கு உள்ளே இறங்கி ஸ்னோர்கெலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் செய்ய விரும்பும் வீரர்களுக்கு சுற்றுலாப் இந்த கடற்கரை ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம்.

கண்கவர் கட்மத் கடற்கரை

கண்கவர் கட்மத் கடற்கரை

நீர் விளையாட்டுகளுக்காக பிரபலமாக அறியப்படும் கட்மத் கடற்கரை பெரும்பாலான சுற்றுலாப்பயணிகளின் பக்கெட் லிஸ்டில் ஒரு அழகிய இடமாகும். முத்து வெள்ளை மணல், நீல நிற நீர், மிதமான தட்பவெப்பநிலை, மிகவும் நட்பாக பழகும் உள்ளூர் மக்கள் என கட்மத் தீவு நம்மை கட்டி போடுகிறது.

அதிகரிக்கப் போகும் சுற்றுலாப் பயணிகளின் வருகை

அதிகரிக்கப் போகும் சுற்றுலாப் பயணிகளின் வருகை

இரண்டு கடற்கரைகளும் இணைந்து இந்தியாவின் நீல கடற்கரைகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தியுள்ளன. இந்தச் சான்றிதழானது லட்சத்தீவை மேலும் பிரபலமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் பயணிகள் முக்கியமாக உயர் சுற்றுச்சூழல் மற்றும் தரமான தரங்களைப் பராமரிக்கும் இடங்களைத் தேடுகிறார்கள். ஆகவே ஏற்கனவே பிரபலமாக உள்ள லட்சத்தீவை இந்த சான்றிதழ் மேலும் பிரபலமாக்கப் போகிறது!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X