Search
  • Follow NativePlanet
Share
» »அமலுக்கு வந்தது புதிய FASTag விதி...லேட்டஸ்டாக வந்த அப்டேட்...தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

அமலுக்கு வந்தது புதிய FASTag விதி...லேட்டஸ்டாக வந்த அப்டேட்...தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

சுங்கசாவடிகளில் இடையூறுகளை தவிர்க்க நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) பிப்ரவரி 17 முதல் புதிய டோல் முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. டோல்கேட் கட்டணங்கள் சரிபார்ப்பு வழிகாட்டுதல்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதால் FASTag டோல் அபராதங்களை தவிர்ப்பதற்கு என்னென்ன முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Highway

ஃபாஸ்டேக் சரிபார்ப்பில் முக்கிய திருத்தங்கள்:

ஜனவரி 28 அன்று வெளியிடப்பட்ட NPCI சுற்றறிக்கையின்படி, சுங்கசாவடியில் டேக் ஸ்கேன் செய்யப்படும்போது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள்ளான பாஸ்டேக் பரிவர்த்தனைகள் சரிபார்ப்பதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

1. உங்கள் பாஸ்டேக், டோல் பிளாசாவை அடைவதற்கு முன்பு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பிளாக் லிஸ்ட் செய்து இருந்தாலோ அல்லது குறைந்த இருப்பு இருந்தாலோ உங்கள் பரிவர்த்தனை மறுக்கப்படும்.

2. டோல் பிளாசாவில் பாஸ்டேக் ஸ்கேன் செய்த 10 நிமிடங்களுக்கு பிறகு inactive அல்லது blacklist ல இருந்தாலோ பாஸ்டேக் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.

மேற்கண்ட இரண்டு நிபந்தனைகள் காரணமாக கணினி பிழைக் குறியீடு 176 உடன் பரிவர்த்தனை நிராகரிக்கப்படுவதுடன் சுங்க கட்டணம் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

FASTag பயனர்கள் காத்திருக்கும் பிரச்சனை :

FASTag முறையில் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு புதிய விதிமுறை மாற்றங்கள் வாகன ஓட்டிகளை எந்த அளவிற்கு பாதிக்கும்? கூடுதல் அபராதங்கள் கட்டுவதை தவிர்க்க வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம். ஃபாஸ்டேக் கணக்குகள் இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது அனுமதி பட்டியல்(active) மற்றும் தடுப்புப் பட்டியல்(inactive) கீழ்கண்ட காரணங்களுக்காக FASTag inactive செய்யப்படலாம்.

1. வங்கி கணக்கில் போதுமான பண இருப்பு இல்லை.
2. முழுமையற்ற KYC சரிபார்ப்பு
3. பிழையான வாகன பதிவு விவரங்கள்

புதிய விதிமுறைகள் அமலில் இருப்பதால் சுங்கசாவடி வருவதற்கு முன்பு பாஸ்டேக் 10 நிமிடத்திற்கு மேலாக பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டிருந்தால் கடைசி நிமிடத்தில் ரீசார்ஜ் செய்வதை தவிர்க்கவும். இருப்பினும் 10 நிமிடத்திற்குள் ரீசார்ஜ் செய்தால் அபராதம் செலுத்தாமல் வழக்கமான சுங்க கட்டணத்தை மட்டும் செலுத்தலாம்.

இந்த புதுப்பிக்கப்பட்ட நடைமுறையின்படி Fastag பயனாளர்கள் ஸ்கேன் செய்யவதற்கு முன் மற்றும் பின் இடைவெளிகளை உள்ளடக்கிய 70 நிமிட சலுகை நேரத்தை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொண்டால் சுங்கசாவடிகளில் ஏற்படும் சிரமங்களிலிருந்து தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இந்த நடைமுறை மாற்றங்கள் தெரியாதவர்கள் எதிர்பாராத அபராதங்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பாஸ்டேக் கணக்குகளில் போதுமான பணம் இருப்பினை பராமரிப்பதும், KYC விவரங்களை உரிய நேரத்தில் புதுப்பிப்பதும் அவசியம் என மற்றொரு நிபுணர் தெரிவித்துள்ளார்.

fastag பயனாளர்களுக்கான அபராதங்களை தவிர்க்கவும் சுமூகமான சுங்க கட்டண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவும் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள்:

* நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் முன் பாஸ்டேக் கணக்குகளில் போதுமான பணம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

* blocklist செய்யப்படாமல் இருபத்தற்கு KYC தகவல்களை தொடர்ந்து புதுப்பிக்கவும்.

* சுங்கசாவடிகளுக்கு வருவதற்கு முன்பே fastag நிலையினை சரிபார்க்கவும்.

திருத்தப்பட்ட நடைமுறைகளை அறிந்து அதை முறையாக பின்பற்றினால் தாமதங்கள் மற்றும் தேவையற்ற அபராதங்களை தவிர்க்கலாம்.

More News

Read more about: fastag
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+