Search
  • Follow NativePlanet
Share
» »மருத்துவச் சுற்றுலா பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இனி ஆயூஷ் விசா மூலம் சுலபமாக பயணிக்கலாம்!

மருத்துவச் சுற்றுலா பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இனி ஆயூஷ் விசா மூலம் சுலபமாக பயணிக்கலாம்!

சுற்றுலாவில் சாகச சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, யாத்ரீக சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, வனவிலங்கு சுற்றுலா, மலைப்பிரதேச சுற்றுலா போல மருத்தவச் சுற்றுலாவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது.

மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாரம்பரிய மருத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டினருக்கு சிறப்பு ஆயுஷ் விசா வகையை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ayushvisatopromotemedicaltourism-1663305586.jpg -Properties

வெளிநாட்டு நோயாளிகள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக ஒரு நாட்டிற்குச் செல்கிறார்கள் அதுவே மருத்துவச் சுற்றுலா ஆகும். மேலும் இந்த துறையில் இந்தியா வலுவாக முன்னேறி வருகிறது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற ஆயுஷ் மருந்துகளுக்கு இந்தியா ஒரு பெரிய மையமாக உள்ளது.

ஆயுஷ் மருந்துகள், சப்ளிமெண்ட்ஸ் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியில் நாடு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளதால், ஆயுஷ் துறையில் முதலீடு மற்றும் புதுமைக்கான சாத்தியக்கூறுகள் வரம்பற்றவை என்று பிரதமர் கூறினார்.

அதன்படி, வெளிநாட்டு நோயாளிகள் ஆயுஷ் விசாவில் இந்தியாவிற்கு வருகை தரலாம் மற்றும் இந்தியா வழங்கும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை பெறலாம். இந்த விசாவை பயன்படுத்தி அவர்கள் இந்தியாவின் பாரம்பரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா ஆகியவற்றில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது, எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனமான விஷயம். ஏற்கனவே உத்தரகாண்ட், கேரளா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் யோகா மையங்கள் இயங்குகின்றன.

அதே போல நாட்டின் மிக முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் மருத்துவச் சுற்றுலா மேலோங்கி வளர்ந்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஆயுஷ் விசா இன்னும் சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளதால், இந்தியா இன்னும் அதிகமான வெளிநாட்டு பார்வையாளர்களை வருகையைக் காண உள்ளது. புதிய மருத்துவ மதிப்பு பயண இடங்களை உருவாக்க மேற்கூறிய நகரங்களில் பல முன்னேற்றங்களும், பல்வேறு மாநிலங்கள் புதிதாக பல இடங்களை உருவாக்கவதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

Read more about: ayush visa medical tourism
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X