Search
  • Follow NativePlanet
Share
» »காஷ்மீரின் முதல் வந்தே பாரத் ரயில்...உலகின் மிக உயரமான ரயில் பாதை...எப்போ துவக்கம் தெரியுமா?

காஷ்மீரின் முதல் வந்தே பாரத் ரயில்...உலகின் மிக உயரமான ரயில் பாதை...எப்போ துவக்கம் தெரியுமா?

காஷ்மீர் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான வந்தே பாரத் ரயில் சேவை மிக விரைவில் நிஜமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, கத்ரா-ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை ஏப்ரல் 19ம் தேதி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். அதோடு உலகின் மிக உயரமான ரயில் பாதையான கத்ராவின் அமைக்கப்பட்டுள்ள செனாப் பாலத்தையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

Vande Bharat

பிரதமர் மோடி கலந்த இந்த இரண்டு விழாக்களில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் இந்த திறப்பு விழாவில் பங்கேற்ற உள்ளனர்.

காஷ்மீர் வந்தே பாரத் ரயில் முதல் கட்டமாக கத்ரா- ஸ்ரீநகரின் பாராமுல்லா வரை இயக்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி ஏப்ரல் 19ம் தேதி இந்த ரயில் சேவையை துவக்கி வைத்தாலும், ஜம்மு ரயில் ஸ்டேஷன் விரிவாக்க பணிகள் நிறைவடைந்த பிறகு ஆகஸ்ட் மாதம் முதல் தான் செயல்பட துவங்கும் என சொல்லப்படுகிறது. தற்போது வரை டில்லி-ஸ்ரீநகர் இடையே நேரடி ரயில் சேவை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Vande Bharat

செனாப் பாலம் - உலகின் மிக உயரமான ரயில் பாலம்

செனாப் பாலம் என்பது, 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பாலமாகும். இது, ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரத்தில் எழுந்துள்ளது. இந்த பாலம், 1,315 மீட்டர் நீளமுள்ளதுடன், மிக வலுவான கட்டுமானத்தைக் கொண்டது. ரயில்வே அமைச்சகத்தின் அதிநவீன பொறியியல் நுணுக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த பாலம், கடுமையான பருவநிலை மற்றும் நிலநடுக்கங்களை தாங்கும் திறனைக் கொண்டதாக உள்ளது. இந்த பாலம் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில்வே இணைப்பு திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இதன் மூலம், காஷ்மீரின் மிகவும் பரந்த மலைப்பாங்கான பகுதிகளுக்கு ரயில்வே வசதி கிடைக்க உதவுகிறது.

பாலத்தின் சிறப்பம்சங்கள்

உயரம் - 359 மீட்டர் (ஈபிள் கோபுரத்தைவிட அதிக உயரம்)
நீளம் - 1,315 மீட்டர்
கட்டுமானம் தாங்கும் சக்தி - மணிக்கு 266 கிமீ வேகத்தில் வீசும் காற்றையும், 8 ரிக்டர் நிலநடுக்கத்தையும் தாங்கும் வல்லமை
ஆயுட்காலம் - 120 ஆண்டுகள்

காஷ்மீரின் முதல் வந்தே பாரத் ரயில்

இந்தியாவின் உயர்தர ரயிலாக விளங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அதிநவீன வசதிகளைக் கொண்ட தொழில்நுட்ப ரயில் ஆகும். உயர்தர வசதிகளை அனுபவித்த படியே மலைப்பாங்கான இடங்களை மிக உயரமான இடத்தில் இருந்து கண்டு ரசிக்கும் வாய்ப்பு இதன் மூலம் பயணிகளுக்கு கிடைக்க உள்ளது.

இந்த சாதனையின் முக்கியத்துவம்

1. சுற்றுலா வளர்ச்சி

செனாப் பாலத்தின் மூலம் காஷ்மீருக்கான சுற்றுலா அதிகரிக்கும். மலைப்பாங்கான இயற்கை அழகை ரசிக்க, சுற்றுலாப் பயணிகள் ரயிலில் பயணிக்க மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இது உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

2. வணிக வசதிகள் மறகறும் பொருளாதாரம்

காஷ்மீரில் பல்வேறு வியாபாரத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கிராமப்புறங்களில் உள்ள விவசாய மற்றும் கைத்தொழில் பொருட்கள் மற்ற மாநிலங்களுக்கு எளிதாக கொண்டு செல்லப்படும். இதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் மேம்படும்.

3. குடிமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு

ரயில் சேவை முழுமையாக செயல்படத் தொடங்கியவுடன், ஜம்மு மற்றும் காஷ்மீரின் தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு உடனடி போக்குவரத்து வசதி கிடைக்கும். இதனால், மருத்துவ, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை சேவைகள் மிக வேகமாக கிடைக்கப் பெறும்.

4. தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ முக்கியத்துவம்

காஷ்மீர் ராணுவ ரீதியாக முக்கியமான பகுதி. பாதுகாப்பு வீரர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு, இந்த ரயில் வசதி மிகப் பயனளிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாதனை இந்தியாவின் பொறியியல் திறனை நிரூபிக்கிறது
செனாப் பாலத்தின் கட்டுமானம் மற்றும் அதன்மீது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம், இந்திய பொறியியலின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இது உலகளவில் இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாட்டையும், உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+