Search
  • Follow NativePlanet
Share
» »புதுச்சேரி மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி – இனி இந்த இடம் தான் புதுச்சேரி பேருந்து நிலையம்!

புதுச்சேரி மக்களுக்கு ஒரு முக்கிய செய்தி – இனி இந்த இடம் தான் புதுச்சேரி பேருந்து நிலையம்!

வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எத்தனை பேருந்துகள் இயக்கப்பட்டாலும் புதுச்சேரி பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை புதுப்பித்து வருகின்றனர். புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி நகரத் திட்டப் பணிகள் நடைபெறுவதையொட்டி, வரும் 16 ஆம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையமாக AFT மைதானம் செயல்படவுள்ளது. இதனால் புதுவை மக்களும், புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் இனி AFT மைதானத்தை தான் பயன்படுத்த வேண்டும்!

சீரமைக்கப்படும் புதுச்சேரி பேருந்து நிலையம்

புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் ரூ.30 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு, பூமிபூஜை போடப்பட்டது. இதில் முதல்கட்டமாக பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக மைய பகுதியைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

AFT மைதானம் தான் இனி புதுவை பேருந்து நிலையம்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் நடைபெறுவதையொட்டி, வரும் 16 ஆம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையமாக AFT மைதானம் செயல்படவுள்ளது. புதுச்சேரி மக்களும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் இனி AFT மைதானத்தை தான் புதுவை பேருந்து நிலையமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

newpuducherrybusstandisaft

இனி புதுவை மால் அருகே வாகனம் நிறுத்தக் கூடாது

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, தற்காலிகமாக AFT மைதானத்துக்கு பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை, நிழற்குடை போன்றவை ஏ.எப்.டி மைதானத்தில் விரைவாக அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூா் சாலையில் உள்ள தியாகி வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலையிலிருந்து ரயில்வே கேட் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்படுகிறது.

AFT மைதானத்தை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

அதனால் குறுகிய காலத்திற்கு புதுச்சேரி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முடியும் வரை அனைத்து வழித்தட பேருந்துகளும் AFT மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படவுள்ளது. ஜூன் 16-ஆம் தேதி முதல் AFT மைதானத்தில் இயங்கும் பேருந்து நிலையத்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

More News

    Read more about: pondicherry news tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+