Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை மெரினாவில் ரோப் கார் அறிமுகம் – குஷியில் சென்னை மக்கள்!

சென்னை மெரினாவில் ரோப் கார் அறிமுகம் – குஷியில் சென்னை மக்கள்!

ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரையான சென்னை மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சமில்லை. துரித உணவகங்கள் துவங்கி, விளையாட்டுகள், குதிரை சவாரி, தலைவர்கள் சமாதி என மெரினாவில் நேரம் போவது தெரியாது. இந்த பட்டியலில் இப்போது ரோப் கார் சேவையும் சேரவுள்ளது மக்களே! கூடிய விரைவில் சென்னை மக்கள் ரோப் காரில் சென்று மெரினாவின் அழகை ரசிக்கலாம்!

Ropeway

சென்னையின் முக்கிய அங்கம் - மெரினா

சென்னையில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் முதன்மையானது மெரினா கடற்கரை. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் சென்னை வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் முக்கிய சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது சென்னை மெரினா கடற்கரை. குறிப்பாக பண்டிகை, விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் குடும்பத்துடன் வருவார்கள். வார இறுதி நாட்களில் பல ஆயிரம் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்த கடற்கரைக்கு ஆண்டுக்கு பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

மெரினாவில் ரோப் கார் சேவை

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவில் மக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த கடற்கரைக்கு வந்து பொழுதை கழிக்கின்றனர். இதனால், கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, "சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை அமைக்கப்பட உள்ளது.

Ropeway

கடற்கரையின் அழகை பறந்தபடி காணலாம்

சென்னையில் அமைந்துள்ள உலகிலேயே நீளமான கடற்கரை என பார்க்கப்படும் சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த பல்வேறு திட்டங்களை சென்னை பெருநகர மாநகராட்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு தரப்பிலும் கோரிக்கையாக வைத்த மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது சென்னை பெருநகர மாநகராட்சி. இப்போது மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் இயற்கை எழிலை கண்டு களிக்கும் வகையிலும் இந்த ரோப் கார் சேவை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர்

இந்த நிலையில் மெரினா ரோப் கார் சேவைக்கு கட்டுமான பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் ரோப் கார் சேவை கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் ரோப் கார் சேவை கட்டுமான பணிக்கு டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. திட்ட மதிப்பாய்வு, கட்டுமான வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் என விரிவான அறிக்கை உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் சென்னை மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. டெண்டர் உறுதி செய்யப்பட்ட பின்னர் அடுத்த கட்ட பணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் சேவை எப்போது

இந்த ரோப் கார் சேவை குறித்த திட்டத்தை, 2022 ஆம் ஆண்டே அரசு அறிவித்திருந்தது. நேப்பியர் பாலம் முதல், நம்ம சென்னை செல்ஃபி பாய்ண்ட்-விவேகானந்தர் இல்லம் வரை இந்த சேவை தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த சேவை கைவிடப்பட்டது. இப்போது சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை துவங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதே போல, கடற்கறையின் 10 இடங்களில் ரோப் கார் சேவை அமல்படுத்தப்பட இருக்கிறது. டெண்டர் உறுதியான பின்னர் முதல் சேவை எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்!

More News

    Read more about: chennai news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+