காலை ஆறு மணிக்கெல்லாம் அப்படி ஓடும் மக்கள். வண்டிகளும் மக்கள்கூட்டமும் நெரிசலைக் கொடுத்து சென்னை வீதிகளை நிறைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் வேண்டா விருப்பாக அலுவலகம் செல்லும் மக்களே.. சென்னையில் இப்படி ஒரு சீதோஷ்ண நிலையை எப்பவாதுதான் அனுபவிக்கமுடியும்.

அதிகாலையில் பெருங்களத்தூர் வழியே செல்பவர்களுக்கு பழக்கமிருக்கும். அந்த ஜில் கிளைமேட் இப்போது 10 மணி தாண்டியும் சென்னையின் பல இடங்களில் சிறப்பாக இருக்கிறது.
இரண்டு நாட்களாக அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறதன் காரணமாக சென்னையும் அதன் மக்களும் குளு குளு என வானிலையை அனுபவிக்கின்றனர்.
நீங்களும் இன்றைய பொழுதை ஒரு பைக் ரைடுடன் தொடங்கலாமே. விடுமுறை இல்லையா..
மூன்று நாட்களில் வார இறுதி வந்துவிடும் இனி ஜாலிதானே..