Search
  • Follow NativePlanet
Share
» »சபரிமலை செல்லும் பக்தர்களே – சென்னை, மதுரை, புதுச்சேரியிலிருந்து பம்பைக்கு சிறப்பு அரசு பேருந்துகள்!

சபரிமலை செல்லும் பக்தர்களே – சென்னை, மதுரை, புதுச்சேரியிலிருந்து பம்பைக்கு சிறப்பு அரசு பேருந்துகள்!

2024 ஆம் ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 15 அன்று திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் நாளே, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிலக்கல்லில் முகாமிட்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் இருந்து சபரிமலை செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழக அரசு பேருந்து கழகம் சார்பில் சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மதுரை, திருச்சி, கோவை, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன!

Sabarimala Temple

தமிழக அரசு சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் துவக்கி வைத்தது.

பல்வேறு நகரங்களிலிருந்தும் பம்பைக்கு பேருந்து சேவை

தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் யாவும் நிலக்கல் வரையே முன்பு சென்று கொண்டிருந்தன. ஆனால், அங்கிருந்து பம்பை வரை 18 கிலோ மீட்டர் தொலைவிற்கு கேரளா அரசு பேருந்துகளில் செல்ல வேண்டும். சமீப ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தைகள் அதிக அளவில் சபரிமலைக்கு செல்வதால் பேருந்துகளில் மாரி செல்வதில் சிரமமாக இருப்பதாக தமிழக பக்தர்களின் தரப்பில் கூறப்பட்டது. அதனால், தற்போது தமிழத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் பம்பைக்கு சிறப்பு பேருந்துகளின் சேவை துவங்கப்பட்டது.

Sabarimala Temple

சென்னை கிளாம்பாக்கம் துவங்கி, புதுவை, கடலூர், மதுரை

இந்த சிறப்பு பேருந்துகள் யாவும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை நாள்தோறும் இயக்கப்படும். அதே போல, இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை வரை நாள்தோறும், இரவு 8 மணிக்கு மதுரையிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக பம்பைக்கும், மாலை 5.30 மணிக்கு புதுச்சேரியிலிருந்து கடலூர், நெய்வேலி டவுன்சிப், விருதாச்சாலம், பெண்ணாடம், திட்டக்குடி வழியாக பம்பைக்கும், இரவு 9 மணிக்கு திருச்சியிலிருந்து திண்டுக்கல், தேனி வழியாக பம்பைக்கும் அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்த தேதிகளில் பேருந்து சேவை இருக்காது

சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிசம்பர் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மீண்டும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை மீண்டும் சிறப்பு பேருந்துகளின் சேவை துவங்கும் என்றும் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் புக் செய்வது எப்படி?

மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in என்கிற அதிகாரப்பூர்வ இணையத்தளம் வாயிலாகவோ அல்லது TNSTC செயலி மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014426 மற்றும் 9445014421 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

More News

    Read more about: sabarimala tnstc kerala
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+