Search
  • Follow NativePlanet
Share
» »13th Sharjah Light Festival 2024: 'ஒளி திருவிழா' எங்கு நடக்கிறது தெரியும்?

13th Sharjah Light Festival 2024: 'ஒளி திருவிழா' எங்கு நடக்கிறது தெரியும்?

By Shivani Shree

உலகளவில் பெரும்பாலான நாடுகள், சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தி வருவது வழக்கம். அந்த வரிசையில்,

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் மற்றும் அபுதாபிக்கு அடுத்தபடியாக மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் ஷார்ஜா.

இந்த நகரத்தில், முதன்முதலில் 2011 ஆம் ஆண்டில் ஒளி, கலை மற்றும் கலாசாரத்தின் கொண்டாட்டமாக, 'ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவல்' அறிமுகப்படுத்தப்பட்டது. இது, நகரத்தின் கட்டடக்கலை மற்றும் அடையாளங்களை வசீகரிக்கும் வெளிச்சத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.

பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் கலாசார அமைப்புகளுடன் இணைந்து, ஷார்ஜா வர்த்தக மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் முன்முயற்சியாக, இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

lightshow

5 லட்சம் பார்வையாளர்கள்

'ஷார்ஜா லைட் ஃபெஸ்டிவலின்' மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளைக் காண, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மக்கள் ஷார்ஜாவுக்குச் செல்கின்றனர். இசையமைப்பாளர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள், ஒளி நிபுணர்கள் நிகழ்த்தும் திருவிழா, பல்வேறு வயதினரையும் ஈர்க்கும்.

அல் நூர் மசூதி

அல் கஸ்பா

காலித் லகூன் கார்னிச்

அல் மஜாஸ் நீர்முனை

பல்கலைக்கழக நகர மண்டபம்

ஷார்ஜா கோட்டை அல்ஹிஸ்ன்

அல் தைத் கோட்டை

ஷார்ஜா நகர முனிசிபாலிட்டிட் கட்டடம்

அல் நூர் தீவு

ஷார்ஜா கலை அருங்காட்சியகம்

ஆகிய இடங்கள் ஒளிரும். கல்வி, கலை, தகவல் தொடர்பு, சுற்றுச்சூழல், வரலாறு, அறிவியல், அறிவு மற்றும் எதிர்கால திட்டங்களில், எமிரேட்டின் முன்னேற்றத்தை சித்தரிக்கும் காட்சிகளை காட்சிப்படுத்தப்படும். மாலையில் தொடங்கி இரவு வெகுநேரம் வரை ஒளிரும் இவற்றை, 5 லட்சம் பேர் வரை கவர்ந்திருக்கிறது.

எப்போது ஒளி திருவிழா

பிப்ரவரி மாதம் 7 முதல் 18 ஆம் தேதி வரை நடக்கும் இந்த ஒளி திருவிழாவில், எமிரேட் முழுவதும் உள்ள முக்கிய இடங்கள் ஒளிரூட்டப்படும். 13 ஆவது ஆண்டாக நடக்கும் இந்த லைட் திருவிழாவை காண, உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சர்வதேச சுற்றுலா பயணியர்களும் விமான டிக்கெட்டுகளை புக் பண்ணி வருகின்றனாம்.

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+