Search
  • Follow NativePlanet
Share
» »இனி விண்வெளியில் நடப்பதை இங்கிருந்தே காணலாம் – வரவிருக்கிறது இந்தியாவின் விண்வெளி ஆய்வகம்!

இனி விண்வெளியில் நடப்பதை இங்கிருந்தே காணலாம் – வரவிருக்கிறது இந்தியாவின் விண்வெளி ஆய்வகம்!

நாம் எல்லாவற்றையும் கண்டு களிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவில் வரவிருக்கிறது முதன் முதல் விண்வெளி ஆய்வகம்! பெங்களூரைச் சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான திகந்தாரா இந்தியாவின் முதல் வணிக விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு ஆய்வகத்தை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்வால் பகுதியில் அமைக்க உள்ளது, இது பூமியைச் சுற்றி வரும் 10 செமீ அளவுள்ள சிறிய பொருட்களைக் கண்காணிக்கும்.

விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு ஆய்வகம் விண்வெளியில் எந்த ஒரு செயலையும் கண்காணிக்க உதவும். மேலும், ராணுவ செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி குப்பைகளை கவனிக்கும். இது உலகளாவிய விண்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு வகையான கண்காணிப்பு நிலையமாக நம்பப்படுகிறது.

indiasfirsteverspaceobservatory1-1662095106.jpg -Properties

தற்போது, விண்வெளி குப்பைகளை கண்காணிப்பதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள வணிக நிறுவனங்கள் கூடுதல் உள்ளீடுகளை வழங்கும் பல இடங்களில் கண்காணிப்பு நிலையங்களைக் கொண்டுள்ளது.

திகந்தராவின் தலைமை நிர்வாக அதிகாரி அனிருத் ஷர்மா, " ஆஸ்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையில் இத்தகைய வசதிகள் இல்லாததால் ஏற்படும் குறைப்பாட்டை உத்தரகாண்டில் அமைக்கப்படும் கண்காணிப்பு மையம் நிரப்பும் எனவும், இது இந்திய துணைக்கண்டத்திற்கு மேலே உள்ள விண்வெளி நடவடிக்கைகளை கண்காணிக்கும் மற்றும் நிகழ்நேர தகவல்களை வழங்கும் எனவும் தெரிவித்தார்."

ஆழமான விண்வெளியில், குறிப்பாக புவிநிலை, நடுத்தர-பூமி மற்றும் உயர்-பூமி சுற்றுப்பாதைகளில் நிகழும் நிகழ்வுகளைக் கண்காணிக்க இந்த ஆய்வகம் உதவும். செய்யப்பட்ட உயர்தர அப்சர்வேஷன்கள் அதன் பார்ட்னர் கிரவுன்ட் பேஸ்டு சென்சார் அப்சர்வேஷன்களால் நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது.

"இந்தத் தரவு மூலம், செயற்கைக்கோள்கள் மற்றும் பிற விண்கலங்கள் அவற்றின் இருப்பிடம், வேகம் மற்றும் பாதை பற்றிய துல்லியமான கணிப்புகளைச் செய்வதன் மூலம் மோதுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்க முடியும்" என்று சர்மா கூறினார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரை மேற்கோள் காட்டி, கண்காணிப்பு மையத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை சர்மா விளக்கினார். உக்ரைனில் போருக்கு முன்னதாக, பல ரஷ்ய செயற்கைக்கோள்கள் அப்பகுதியில் வட்டமிடுவதைக் காண முடிந்தது. எனவே, இந்த ஆய்வகம், துணைக் கண்டத்தில் விண்வெளிச் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்தியாவிற்கு உள்நாட்டிற்குரிய திறன்களை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

தற்போது, இந்தியா மிகப்பெரிய மற்றும் உலகின் இரண்டாவது உயரமான ஆய்வகங்களில் ஒன்றான ஹன்லே, லடாக்கில் அமைந்துள்ளது. கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி, ரேடியோ டெலஸ்கோப் உதய்பூர் சோலார் அப்சர்வேட்டரி, ஏஆர்ஐஎஸ் அப்சர்வேட்டரி போன்றவை இந்தியா முழுவதிலும் மற்ற ஆய்வகங்களாகும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X