Search
  • Follow NativePlanet
Share
» »பண்டிகைக் காலத்திற்காக விடப்பட்ட விசாலமான விஸ்டாடோம் ரயில்களில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

பண்டிகைக் காலத்திற்காக விடப்பட்ட விசாலமான விஸ்டாடோம் ரயில்களில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

அழகான விஸ்டாடோம் பெட்டிகளின் ஜன்னல் ஓரத்தில் இயற்கை அழகை ரசித்தப்படியே பயணம் செய்வது மிகவும் இனிமையாக இருக்கும்! சமீபகாலமாக விஸ்டாடோம் ரயில்களின் மோகம் சுற்றுலாப் பயணிகளிடையே அதிகரித்துள்ளது. இது மிகவும் பிரபலமடைந்து வருவதால் அடிக்கடி புது புது வழித்தடங்கள் இணைக்கப்படுகின்றன. பெரும்பாலான பயணிகளும் இந்த அழகிய ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்போது மேற்கு வங்காளத்தில் பூஜை சீசன் தொடங்கிவிட்டதால் நியூ ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் இடையே உள்ள விஸ்டாடோம் பெட்டிகள் தினமும் இயக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்டாடோம் கோச் கொண்ட இந்த ரயில் வார இறுதி நாட்களில் இரண்டு நிலையங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது.

vistadometrainsinindia-1662615100.jpg -Properties

இது பண்டிகை காலம் என்பதால் ஏற்கனவே 80 சதவீதத்திற்கும் அதிகமாக முன்பதிவு முடிந்துவிட்டதால், கூடுதல் பெட்டிகள் இயக்குவது பயணிகளுக்கு உபயோகமாக இருக்கும் என IRCTC தெரிவித்தது. அதன்படி, இந்த வழித்தடத்தில் தினமும் விஸ்டாடோம் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்டாடோம் ரயில்களில் பயணம் செய்வது இந்தியாவில் மேற்கொள்ளக்கூடிய மிக அழகிய ரயில் பயணங்களில் ஒன்றாக அமைகிறது. இந்த ரயில்கள் பல அழகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

இந்த அழகிய ரயில் சுற்றுப்புறத்தின் அற்புதமான 360 டிகிரி காட்சி, சுழலும் நாற்காலிகள், வெளிச்சம், வைஃபை அணுகல் மற்றும் பல வசதிகளை பயணிகளுக்கு வழங்குகிறது. ரயில் பெட்டிகளில் ஒரு கண்காணிப்பு தளமும் உள்ளதது, பயணிகள் நின்று கொண்டு கடந்து செல்லும் இயற்கைக்காட்சிகளைப் பார்த்து ரசிக்க அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுமார் 750 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் ஒரு டிக்கெட்டின் கீழ் சூடான பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன. பயணிகள் காடுகள், தேயிலைத் தோட்டங்கள், பூடான் மலைகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகளை பார்த்து ரசித்தப்படி பயணம் செய்யலாம்.

விஸ்டாடோம் டிக்கெட்டுகள் மற்றும் பேக்கேஜ்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இந்த அழகான அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Read more about: west bengal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X