Search
  • Follow NativePlanet
Share
» »158 பேர் பலி, 180 பேர் காணவில்லை - வயநாடு நிலச்சரிவுக்கான காரணங்கள் என்ன?

158 பேர் பலி, 180 பேர் காணவில்லை - வயநாடு நிலச்சரிவுக்கான காரணங்கள் என்ன?

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி அருகே மலைப்பாங்கான பகுதிகளில் தொடர் நிலச்சரிவில் சிக்கி 200 பேர் காயம் அடைந்த நிலையில் குறைந்தது 158 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 180 க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. பல குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கவலை தெரிவித்து வருவது பார்ப்போரின் மனதை உருக்க வைக்கிறது! ஆனால் இதற்கு என்ன காரணம், மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுமா என்று நாம் இங்கே பார்ப்போம்!

மழை மற்றும் நிலச்சரிவால் மோசமாக பாதிப்படைந்த வயநாடு

செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் வயநாட்டின் மலைப்பகுதிகளில் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுகணக்கான குடும்பங்கள் சிக்கிய நிலையில், 158 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 1,000க்கும் மேற்பட்ட மக்களை ராணுவம் வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளது. "என்டிஆர்எஃப் குழு, ராணுவம், மாநில காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களை சேர்ந்த சுமார் 500 முதல் 600 பணியாளர்கள் இன்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்று பிரிகேடியர் அர்ஜுன் சீகன் கூறினார்.

துண்டிக்கப்பட்ட சாலைகளினால் மீட்பு பணிகளில் சவால்

கேரளாவில் பெய்து வரும் இடைவிடாத மழையால் இப்பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, தடைசெய்யப்பட்ட சாலைகள் நிவாரணப் பணிகளை சிக்கலாக்கியுள்ளன. வயநாடு மாவட்டத்தில் நான்கு மணி நேரத்தில் மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு முன், மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 372 மிமீ மழை பதிவாகியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் ராணுவத்திற்கு உதவ கடற்படைக் குழுக்கள் மற்றும் விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் அணிதிரட்டப்பட்டுள்ளன. காலநிலை சீரானவுடன் சிக்கித் தவிக்கும் மக்களை விமானத்தில் ஏற்றிச் செல்வோம் என பிரிகேடியர் அர்ஜுன் சீகன் தெரிவித்தார்.

Wayand landslides death toll rises to 158

அடுத்த சில தினங்களுக்கு கேரளாவில் ஆரஞ்சு அலர்ட்

அடுத்த இரண்டு நாட்களுக்கு வயநாடு மற்றும் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் குறித்து விவாதம்

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எல்டிஎஃப் அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். மேலும், பாஜக தலைவர் ஜேபி நட்டா, கட்சி தொண்டர்கள் மீட்புப் பணிகளில் உதவுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Wayand landslides death toll rises to 1581

இழப்பீடு வழங்கும் மத்திய அரசு

நிலச்சரிவுகளால் பல வீடுகள் இடிந்து, நீர்நிலைகள் நிறைந்து, மரங்கள் வேரோடு சாய்ந்தன. முண்டக்கை, சூரல்மாலா, அட்டமலா மற்றும் நூல்புழா ஆகிய அழகிய கிராமங்கள் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டு, பலர் சிக்கித் தவிக்கின்றனர். இந்த சோக நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்ப்லைன் எண்களில் உதவி கோருங்கள்

மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண முகாம்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று மாலை உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. மாநில சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறையையும் திறந்துள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 9656938689 மற்றும் 8086010833 என்ற ஹெல்ப்லைன் எண்களில் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

over 180 missing as rescue operations continues

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்ப்போம்

· காலநிலை மாற்றம், மோசமான நிலப்பரப்பு மற்றும் காடுகளின் இழப்பு ஆகியவை கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலச்சரிவுகளுக்கு சரியான செய்முறையை உருவாக்கியது என்று பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

· கடந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தேசிய தொலைநிலை உணர்திறன் மையம் வெளியிட்ட நிலச்சரிவு அட்லஸ் படி, இந்தியாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய 30 மாவட்டங்களில் 10 கேரளாவில் உள்ளன, வயநாடு 13 வது இடத்தில் உள்ளது.

· மேற்குத் தொடர்ச்சி மலைகளில், குறிப்பாக கேரளாவில், மிக அதிக மக்கள் தொகை மற்றும் வீட்டு அடர்த்தி காரணமாக, குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்பங்களின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

· ஸ்பிரிங்கர் 2021 இல் வெளியிட்ட ஒரு ஆய்வில், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருப்பதாகவும், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் குவிந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

· வயநாட்டில் காடுகளின் பரப்பைக் குறைப்பது குறித்த 2022 ஆம் ஆண்டு ஆய்வில், 1950 மற்றும் 2018 க்கு இடையில் மாவட்டத்தில் 62 சதவீத காடுகள் காணாமல் போயுள்ளன, அதே நேரத்தில் தோட்டப் பரப்பு சுமார் 1,800 சதவீதம் அதிகரித்துள்ளது.

· மழையின் தீவிரம் அதிகரிப்பதால், கேரளாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர் மற்றும் நடு நிலச் சரிவுகளில், பருவமழைக் காலங்களில் நிலச்சரிவுகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

· விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, காலநிலை மாற்றம் மேற்குத் தொடர்ச்சி மலையில் நிலச்சரிவுகளின் சாத்தியத்தை அதிகரித்து வருகிறது, இது உலகின் உயிரியல் பன்முகத்தன்மையின் எட்டு "வெப்பமான ஹாட்ஸ்பாட்களில்" ஒன்றாகும். இது இனி வரும் காலங்களில் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

    Read more about: wayanad landslides news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+