Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நீலம்பூர் » ஈர்க்கும் இடங்கள் » டீக் மியூசியம்

டீக் மியூசியம், நீலம்பூர்

26

நீலம்பூர் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள இந்த டீக் மியூசியம் இரண்டு அடுக்குகளை கொண்ட ஒரு கட்டிடமாகும். இங்கு தேக்கு மரம் குறித்த பல விரிவான தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

1995ம் ஆண்டில் கேரள வனத்துறை ஆராய்ச்சி மைய வளாகத்துக்குள்ளேயே கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலேயே இது போன்ற ஒரே ஒரு அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமிக்க வைக்கும் தகவல் பொக்கிஷமாக காட்சியளிக்கும் இந்த அருங்காட்சியகம் பயணிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் வெகுவாக கவர்கிறது. பழமையான தேக்கு மரத்தின் சிக்கலான வேர் அமைப்பு ஒன்று வாசலிலேயே ஒரு சிற்பம் போன்று பயணிகளை வரவேற்கிறது.

கன்னிமரா தேக்கு எனப்படும் ஒரு பிரம்மாண்ட தேக்கு மரத்தின் வெளிச்சப்படம், ‘உரு’ என்றழைக்கப்படும் புராதன கப்பல் ஒன்றின் ‘மாதிரி மர-வடிவமைப்பு’ மற்றும் பல்வேறு அளவுகளில் தேக்கு கம்பங்கள் ஆகியவற்றை பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.

480 வருடங்கள் பழமையான ஒரு பிரம்மாண்ட தேக்கு மரத்தின் அடிப்பகுதியையும் இந்த மியூசியத்தின் உள்ளே காணலாம். பலவகையான வண்ணத்துப்பூச்சி சேகரிப்புகள், அந்துப்பூச்சிகள் போன்றவற்றுடன் மரங்கள் சாயும் ஓவியக்காட்சிகள், பல்வேறு புகைப்படங்கள் மற்றும் புராதன அறுவடைக்கருவிகள் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த மியூசியம் திங்கள்கிழமை தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
17 Jul,Fri
Return On
18 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
17 Jul,Fri
Check Out
18 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
17 Jul,Fri
Return On
18 Jul,Sat