Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நூப்ரா பள்ளத்தாக்கு » ஈர்க்கும் இடங்கள் » டிஸ்கிட் மடாலயம்

டிஸ்கிட் மடாலயம், நூப்ரா பள்ளத்தாக்கு

7

கடல் மட்டத்திலிருந்து சுமார் 10310 அடி உயரத்தில் அமைந்துள்ள டிஸ்கிட் கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான டிஸ்கிட் மடாலயம் அமைந்துள்ளது. நூப்ரா பள்ளத்தாக்கின் நிர்வாக மையமாக விளங்கி வரும் டிஸ்கிட் கிராமத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இங்கிருக்கும் டிஸ்கிட் மடாலயம் அல்லது டிஸ்கிட் கோம்பா ஒரு முதன்மையான பார்வையிடமாகும். இது நூப்ரா பள்ளத்தாக்கிலேயே மிகவும் பழமையான மற்றும் மிகப் பெரிய பௌத்த மாடலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ட்சோங்-கா-பா-வின் சீடராக இருந்து ஜாங்செம் ட்செராப் ஸாங்போ என்பவரால் 14-வது நுற்றாண்டில் எழுப்பப்பட்ட இடம் தான் டிஸ்கிட் மடாலயம். இந்த மடாலயத்தில் மைத்ரேய புத்தரின் சிலை, ஓவியங்கள் மற்றும் மேளங்கள் ஆகியவை உள்ளன.

இந்த மடாலயம் திபெத்திய கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையைப் பின்பற்றி கட்டப்பட்டுள்ளது. திபெத்தில் உள்ள தசில்ஹும்போ கோம்பாவைக் காட்டும் ஒரு அழகிய சுவரோவியத்தை இந்த மடாலயத்தின் மையத்தில் காண முடியும்.

காங்யு-லாங் மற்றும் ட்சாங்யு-லாங் ஆகியவை இந்த மடாலயத்திற்குள் இருக்கும் இரு வழிபாட்டுத் தலங்களாகும். மேலும், எண்ணற்ற திபெத்திய மற்றும் மங்கோலிய எழுத்துருக்களும் சேர்த்து வைக்கப்பட்டுள்ள களஞ்சியமாக இந்த மடாலயம் விளங்குகிறது.

சுமார் 100 துறவிகள் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து தங்கும் வசதியுள்ள இடமாக டிஸ்க் கோம்பா உள்ளது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் டெஸ்மோக்ஹே அல்லது டோஸ்மோசே என்றழைக்கப்படும் ‘ஸ்கேப்கோட் திருவிழா’ இந்த மடாலயத்தில் கொண்டாடப்படுகிறது.

அந்த சமயத்தில், அதர்மத்தைத் தோற்கடித்த தர்மத்தின் வெற்றியைப் பறைசாற்றும் விதத்தில், லாமாக்களின் முகமூடி நடனம் ஒன்றையும் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Mon
Check Out
21 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue