Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நூப்ரா பள்ளத்தாக்கு » ஈர்க்கும் இடங்கள் » பனாமிக் கிராமம்

பனாமிக் கிராமம், நூப்ரா பள்ளத்தாக்கு

31

லே-யில் இருந்து 140 கிமீ தொலைவில் உள்ள பனாமிக் கிராமம், நூப்ரா பள்ளத்தாக்கில் உள்ள முதன்மையான பார்வையிடங்களில் ஒன்றாகும. நூப்ரா பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பனாமிக் கிராமத்திற்கு கண்டிப்பாக வருகை புரிவது சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்தோ-திபெத்திய எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் எல்லையைத் தாண்டிச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. கடல் மட்டத்திலிருந்து 10442 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமம், அதற்கு சற்று வெளியே உள்ள வெந்நீர் ஊற்றுக்காக புகழ் பெற்ற இடமாக இந்த கிராமம் உள்ளது.

இந்த வெந்நீர் நீரூற்றின் தண்ணீரில் கந்தகம் கலந்திருப்பதல் இந்த தண்ணீருக்கு கீல் வாத நோய் மற்றும் பிற நோய்களை குணப்படுத்தும் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த கிராமத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 8 கிமீ தூரத்தில் உள்ள ஹர்காம் என்ற ஆற்றுப் பாலத்திற்கு மலையேற்றம் மூலம் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். இப்பாலத்தை அடையும் சுற்றுலாப் பயணிகள், சற்றுத் தொலைவில் உள்ள 250 ஆண்டுகள் பழமையான என்ஸா மடாலயத்தையும் சுற்றிப் பார்க்க முடியும்.

என்ஸா மடாலயத்தை தரிசிப்பது மட்டுமல்லாமல் பனாமிக் கிராமத்தையொட்டியவாறு நூப்ரா ஆறு பாய்ந்து செல்வதையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும். நூப்ரா ஆற்றை அடையும் சுற்றுலாப் பயணிகள் மனம் மயங்க வைக்கும் மலைப் பகுதிகள், பசுமையான பண்ணை நிலங்கள் மற்றும் மணற்குன்றுகளின் காட்சிகளால் வரவேற்கப்படுவார்கள்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri