Search
  • Follow NativePlanet
Share

ஓர்ச்சா – ஒரு ராஜ உருவாக்கம்!

23

பெட்வா நதி தனது கரங்களில் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கும் ஓர்ச்சா, இந்தியாவின் இதயப்பகுதி போன்ற மத்தியப்பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பந்தல்கண்ட் பகுதியில் புகழ் பெற்று விளங்கிய மன்னரான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் 1501-ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட ஓர்ச்சா, உத்தரப்பிரதேசத்தின் ஜான்ஸியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் நிறுவனரான மஹாராஜா ருத்ர பிரதாப் சிங் அவர்களே இதனை முதன்முதலில் ஆண்ட மன்னராவார்.

ஓர்ச்சா மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

ஒரு மன்னரால் உருவாக்கப்பட்டு ஆளப்பட்ட ஓர்ச்சா, நெஞ்சார்ந்த பாராட்டுகளுக்குரியனவும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடியனவுமாகிய பல கட்டிடங்களைக் கொண்டுள்ளது.

சந்திரஷேகர் ஆசாத் நினைவகம், சாத்ரிகள், தௌஜி கி ஹவேலி, தின்மான் ஹர்டாலின் அரண்மனை, ஃபூல் பாக் போன்றவை ஓர்ச்சாவில் உள்ள சில அற்புதமான ஸ்தலங்களாகும்.

ஓர்ச்சா சுற்றுலாத்துறை, ராஜா மஹால், ராணி மஹால், சுந்தர் மஹால், லக்ஷ்மி நாராயண் கோயில் போன்ற பல இடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கின்றது.

ஓர்ச்சாவில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் செலுத்தப்படும் கட்டுமரத்தில் பயணம் செய்யும் அனுபவத்தைப் பெறலாம். இது சாகச விரும்பிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும். ஓர்ச்சா அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்காகவும் பெரிதும் அறியப்படுகிறது.

இது பெரிய நகரமாக இல்லாவிடினும், இங்கு வாழ்ந்து வரும் மக்கள் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் பழகி வருகிறார்கள் என்பதை விழாக் கொண்டாட்ட சமயங்களில் கண்கூடாகக் காணலாம்.

ஓர்ச்சா – பேரெழில் பொங்கும் ஸ்தலம்!

பிரபல நகரமான ஓர்ச்சாவின் எல்லைக்குள் பொதிந்திருக்கும் சொக்க வைக்கும் அழகை ரசிக்கவரும் பயணிகளை ஓர்ச்சா சுற்றுலாத்துறை பெருமையுடன் வரவேற்கிறது.

இந்த எழில்மிகு நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான மஹால்கள், கோயில்கள், அரண்மனைகள் மற்றும் அழகிய கட்டுமானங்கள் பார்த்து ரசிக்கும் பொருட்டு அணி வகுக்கின்றன.

ஓர்ச்சா பயணத்தின் அற்புதமான நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது செலவிட வேண்டும்.

ஓர்ச்சாவை அடைவது எப்படி?

ஜான்ஸி மற்றும் ஓர்ச்சாவிற்கு இடையிலான தூரம் சுமார் 16 கி.மீ. ஆகும். சாலை வழி போக்குவரத்து சேவைகள் எளிதாகக் கிடைக்கின்றன. பெரும்பாலான சமயங்களில் ஓர்ச்சாவில் ரம்மியமான வானிலையே நிலவுகிறது.

ஓர்ச்சா சிறப்பு

ஓர்ச்சா வானிலை

சிறந்த காலநிலை ஓர்ச்சா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஓர்ச்சா

  • சாலை வழியாக
    மத்தியப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களிலிருந்து ஓர்ச்சாவை எளிதாகவும், வசதியான முறையிலும் அடையலாம். ஓர்ச்சா செல்லும் சாலைகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. மத்தியப்பிரதேசத்தின் முக்கிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சீரான இடைவெளிகளில் இயக்கப்படுகின்றன. சுற்றியுள்ள இடங்களிலிருந்து வாடகை டாக்ஸி மூலம் ஓர்ச்சாவை எளிதாக அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஓர்ச்சாவில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஜான்ஸி இரயில் நிலையமே இதற்கு மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும். இது பிரதான இரயில் நிலையமாக இருப்பதினால், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு இங்கிருந்து ஏராளமான இரயில்கள் இயக்கப்படுகின்றன. ஜான்ஸியிலிருந்து எஞ்சியிருக்கும் தொலைவை பேருந்து மூலம் எளிதாகக் கடக்கலாம். ஜான்ஸி இரயில் நிலையத்திலிருந்து ஓர்ச்சா வரை செல்வதற்கு ஏராளமான டாக்ஸிகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சுமார் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஜான்சி விமான நிலையமே ஓர்ச்சாவிற்கு அருகாமையில் உள்ள விமான நிலையமாகும். விமான நிலையத்திலிருந்து ஒரு வாடகை டாக்ஸி மூலம் ஓர்ச்சாவை அடையலாம். எனினும், பேருந்து வழியாகச் செல்லும் பயணமே விலை குறைந்ததாகக் காணப்படுகிறது. விமான நிலையத்துக்குச் செல்லும் தூரம் மிகக் குறைவாக இருப்பதினால், ஜான்ஸியிலிருந்து ஆகாய மார்க்கமாக வந்து ஓர்ச்சாவை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri