சிறிய நீர்வீழ்ச்சியான அப்ஸரா விஹார், தான் விழும் இடத்தில் ஒரு ஆழமில்லாத குட்டையை உருவாக்குகிறது. இது தேவதைக் குளம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இது நீச்சல், முக்குளித்தல், இயற்கையான திறந்தவெளி குளியல் போன்றவற்றில் பாதுகாப்பான முறையில் ஈடுபட்டுத் திளைக்க மிக அருமையான ஒரு இடமாகும்.
இந்த குட்டை ஆழம் அதிகமின்றி காணப்படுகிறது. அதனால் இது, குழந்தைகள் உடைய குடும்பத்தினர்கள் மிக விரும்பும் ஒரு சிறப்பான ஸ்தலமாகத் திகழ்கிறது. இந்த குளம், பாண்டவா குகைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த குளத்தின் பெயருக்குப் பின்னால் உள்ள கதை, சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது, ஆங்கிலேய அதிகாரிகளின் மனைவிமார்கள் இங்கு வந்து குளித்தபோது, உள்ளூர்வாசிகள் செடிகளுக்கிடையில் மறைந்திருந்து பார்த்ததாகவும், அப்போது அவர்களின் வெள்ளை வெளேரென்ற சருமத்தைப் பார்த்து அப்ஸரஸ்கள் என்றழைக்கப்படும் தேவகன்னிகைகள் தான் இங்கு இறங்கி வந்து குளிக்கின்றனரோ என்று அவர்கள் ஆச்சர்யப்பட்டு இதனை, தேவதைகளின் குளம் என்ற அர்த்தம் தொனிக்குமாறு அப்ஸரஸ் விஹார் என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது. பச்மாரி வரும்போது, அப்ஸரா விஹாரில் நீராடும் சுகானுபவத்தைத் தவற விட்டு விடாதீர்கள்.



Click it and Unblock the Notifications