ஐரீன் குளம், குளியலாடுவதற்கு ஏற்ற ஒரு குளமாகும். இக்குளம் அதனை கண்டுபிடித்தவரான ஐரீன் போஸ் என்பவரின் பெயரிலிருந்தே ஐரீன் குளம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.
இவர் பிரிட்டிஷ் அதிகாரியான ஜஸ்டிஸ் விவான் போஸ் என்பவரின் மனைவியாவார். ஒரு குகையிலிருந்து தண்ணீர் ஊற்றெடுத்து பூமிக்கடியில் பாய்ந்து அதன் பின் ஒரு நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது.
இந்த நீர்வீழ்ச்சி ஒரு அழகிய சிறு குளத்தை உண்டாக்குகிறது. இக்குளமே ஐரீன் குளம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இது ஆழம் குறைந்து காணப்படுவதால் குளிப்பதற்கு மிகத் தோதானதாகத் திகழ்கிறது.