கொலஹோய் பனிக்கட்டி ஆற்றை தொங்கும் பனிக்கட்டி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இது லிட்டர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த பனிக்கட்டி ஆற்றுக்கு "தொங்கும்" என்ற வார்த்தையை பயன்படுத்த காரணமாக அமைந்தது உலக வெம்மை மற்றும் வேறு சில சுற்றுப்புறச் சூழ்நிலைக்காரணிகள் ஆகும்.
வலது புறத்தில் அதிக பாறாங்கற்கள் இல்லாததால் அந்த பக்கம் இருந்து இவ்விடத்தை ரசிப்பதே சிறந்தது. இந்த இடத்தின் இடதுபுறம் மிகவும் ஆபத்தான பகுதியாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த பனிக்கட்டி ஆற்றை சென்றடைய ஒரே வழி நடை பயணம் செல்வதே. ஆனால் இது சற்று கடினமானதாகும். அதனால் மலை ஏறுவதில் அதிக அனுபவம் இல்லாதவர்கள் நல்ல அனுபவசாலியின் உதவியுடன் மலையேருவதே நல்லது.



Click it and Unblock the Notifications