பஞ்ச்டர்னி என்ற இடம் சேஷ்நாக் ஏரியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் ஐந்து நீரோடைகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ளது. பஹல்கமிலிருந்து இந்த இடம் வந்து சேர சுமார் 40 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.
அமர்நாத் செல்லும் யாத்திரையில் இந்த பஞ்ச்டர்னி தான் அமர்நாத்துக்கான கடைசி நிறுத்தம். இங்கிருந்து 6 கி.மீ. தூரமுள்ள ஒரு குறுகிய பாதையில் நடந்துச் சென்றால், சுற்றுலாப் பயணிகள் நேரடியாக அமர்நாத் குகையை வந்தடையலாம். முகாமிட்டு கொள்ள மற்றும் பொழுதைக் கழிக்க இது மிகவும் உகந்த இடம்.



Click it and Unblock the Notifications