பாலம்பூரின் மேற்கில் 10 கிமீ தொலைவிலும் மற்றும் தர்மசாலாவில் இருந்து 15 கிமீ தொலைவிலும் மலைகள் மற்றும் வனத்தின் வனப்புகளினூடே பானெர் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் சாமுண்டா தேவி கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடமாகும்.
இந்த கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருப்பதால் வழிபாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த கோவிலில் இந்து கடவுளான துர்கா தேவி, சாமுண்டா தேவி என்ற பெயரில் வீற்றிருக்கிறார்.
இந்த இடம் மிகவும் அழகுறவும், அமைதியுடனும் இருப்பதால், இங்கு வரும் பக்தர்கள் அமைதியான முறையில் தியானம் செய்யவும், தங்கள் வேண்டுதல்களை கடவுளிடம் முறையிட்டு அருள் பெறவும் ஏற்ற இடமாக உள்ளது.
சுற்றுலா பயணிகள் இந்த கோவிலிற்கு உள்ளே உள்ள குளத்தில் புனித நீர் புனித நீர் நிரம்பியுள்ளதாக நம்புகின்றனர். 'சிவபெருமான்' லிங்க வடிவில் காட்சியளிப்பதைப் போன்ற குகை போன்ற வெற்றிடத்தையும் இங்கே காண முடியும்.
இங்குள்ள ஆண் மற்றும் பெண் கடவுள்களின் ஓவியங்கள் இதன் சுவற்றில் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். இதன் அருகிலுள்ள மற்றுமொரு பார்வையிடம் பான் கங்கா என்றழைக்கப்படும் ஆயுர்வேத மருத்துவமனை, சமஸ்கிருதக் கல்லூரி மற்றும் நூலகம் ஆகும். இந்த நூலகத்தில் பழங்கால ஓலைச் சுவடிகள், வானவியல் நூலகள், வேதங்கள், புராணங்கள் மற்றும் உபநிஷதங்களை காண முடியும்.



Click it and Unblock the Notifications