பாலம்பூர் பகுதியில் ட்ரெக்கிங் எனப்படும் மலையேற்றப்பயணம் சுற்றுலாப்பயணிகளிடையே விரும்பப்படும் பிரசித்தமான பொழுதுபோக்கு அம்சமாக காணப்படுகிறது. பாலம்பூர் மற்றும் சம்பாவுக்கு இடையே தௌலாதார் மலைகளின் வழியே செல்லும் பல மலையேற்றப்பாதைகள் அமைந்துள்ளன.
பாலம்பூரிலிருந்து ஷிங்கார் பாஸ் வழியாக ஹோலிக்கு செல்லும் பாதை, பாலம்பூரிலிருந்து இந்திரஹார் பாஸ் வழியாக தரம்ஸ்தலாவுக்கு செல்லும் பாதை, பைஜ்நாத்திலிருந்து தம்சார் பாஸ் வழியாக மணாலிக்கு செல்லும் பாதை போன்றவை இப்பகுதியிலுள்ள பிரபலமான மலையேற்றப்பாதைகளாக அமைந்துள்ளன. இவற்றை கடப்பதற்கு 5 முதல் 8 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளத்தாக்குகளின் வழியே சுற்றிலும் நிரம்பி வழியும் இயற்கை அழகை ரசித்தபடி இந்த மலைப்பாதைகளில் நடைப்பயணத்தில் ஈடுபடலாம். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான பருவம் மலையேற்றத்திற்கு ஏற்றதாக காணப்படுகிறது.
இந்தியாவில் வேறு எங்குமே காண முடியாத இயற்கை அழகை இந்த மலைப்பாதைகளில் கண்டு ரசிக்கலாம் என்பது இந்த பாலம்பூர் சுற்றுலாத்தலத்தின் தனித்தன்மையான விசேஷமாகும்.



Click it and Unblock the Notifications