பழனிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த போகர் சமாதியையும் பார்க்க வேண்டும். இந்த போகர் சமாதி, முருகன் ஆலயத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. முருக பக்தரான இந்த போகர் இக்கோயிலுக்கு தண்டாயுதபாணி ஆலயம் என்று பெயர் சூட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் சிலையையும் போகர்தான் செதுக்கியதாக நம்பப்படுகிறது.
மேலும் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தின் ஆசனாக போகர் அழைக்கப்படுகிறார். அவர் சீனாவுக்குச் சென்று சித்த மருத்துவத்தின் சிறப்பை பரப்பியதாகவும் வரலாறு உண்டு. இந்த போகர் சமாதியில் இருந்து தண்டாயுதபாணி ஆலயத்திற்கு நேரடியாக ஒரு சுரங்கப்பாதை இருப்பதாகவும் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications