பழனிக்கு அருகில் இருக்கும் தேக்கந்தோட்டம் என்ற கிராமத்தில் இந்த தேக்கந்தோட்டம் நீழ்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அது பழனி மலையிலிருக்கும் நீர் தேக்கத் தொட்டியில் தேக்கப்படுகின்றது.
இந்த நீர் தேக்கத் தொட்டி வாட்டர் டேம் என்று அழைக்கப்படுகிறது. தேக்கந்தோட்டம் கிராமத்தில் இறங்கி 4 கிமீ தூரம் நடந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். மேலும் பழனியில் இருந்து தேக்கந்தோட்டம் கிராமத்திற்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நீர்வீழ்ச்சியை அடைய மலைமீது ஏறிச் செல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications