பாலி மாவட்டத்தில் சுக்ரி ஆற்றின் கரையில் இந்த சோஜட் எனும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் தம்ரவதி என்ற பெயரில் முற்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. ஒரு கோட்டை மற்றும் சேஜல் மாதா கோயில், சதுர்புஜ் கோயில், சாமுண்டமாதா கோயில் போன்ற கோயில்களுக்கு இந்த ஸ்தலம் பிரசித்தி பெற்றுள்ளது.
இவை தவிர மருதாணிச்சாயம் தயாரிக்க பயன்படும் ஹென்னா தாவரப்பண்ணை ஒன்றும் இங்குள்ளது. வடஇந்தியாவில் மெஹந்தி என்று பெயரில் இது பெண்கள் மத்தியில் ஒரு முக்கிய அலங்காரப்பொருளாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
திருமணம், பண்டிகை மற்றும் திருவிழாக்காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த மெஹந்தி அலங்காரம் தற்போது மேற்கத்திய ஃபேஷன் கலாச்சாரத்திலும் இடம் பெறத்துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பயணிகள் இங்குள்ள தேசுரி - குர்கி கோட்டை, ராம் தேவ்ஜி கோயில் மற்றும் பீர் மஸ்தான் தர்க்கா போன்ற இதர அம்சங்களுக்கும் விஜயம் செய்யலாம். மேலும், இந்த ஸ்தலம் கிருஷ்ணரை துதித்து வாழ்ந்த பக்தமீரா பிறந்த இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications