பன்ஹாலா கோட்டையானது பன்ஹாலாவின் அடையாளமாகவே பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. தன் நகரத்தின் பெயரிலேயே அழைக்கப்படும் இந்த கோட்டை தக்காணப் பிரதேசத்தின் மிக முக்கியமான பிரம்மாண்ட கோட்டையாகும். இது போஜ ராஜாவால் சுமார் 900 வருடங்களுக்கு முன்பு 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை அதன் இரட்டைச்சுவர் அமைப்பு கொண்ட வாசல் வழியாக மட்டுமே நுழையும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையை சுற்றிப்பார்க்கும் அனுபவம் நம்மை அக்கால மராத்திய ஆட்சியாளர்கள் காலத்துக்கு அழைத்துச்செல்கிறது.
இந்த கோட்டை அந்த நாளிலிருந்து இந்த நாள் வரை பயணிகளையும் வரலாற்றுப் பிரியர்களையும் மிக அதிக அளவில் ஈர்த்துவருகிறது.



Click it and Unblock the Notifications