பகவதி கோயில், பத்தனம்திட்டா

பகவதி கோயிலில் காணப்படும் நுட்பமான சுவரோவியங்களும், வசீகரமான கற்சிற்பங்களும் தொன்மையான கட்டிடக் கலைக்கு சிறந்த சாட்சிகளாக திகழ்ந்து வரும் அற்புத கலைப்படைப்புகள்.

இந்தக் கோயில் பத்தனம்திட்டா நகரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலயாளப்புழா எனும் நகரத்தில் அமைந்திருக்கிறது. இதன் முதன்மை தெய்வமான மூகாம்பிகை அம்மனின் விக்ரகம், ஆக்ரோஷமான பத்ரகாளியின் உருவத்தோற்றத்தில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

பகவதி கோயிலில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 11 நாட்கள் வெகு விமரிசையாக ஆண்டுத் திருவிழா நடைபெறும். அதோடு சிவராத்திரியின் போது நடத்தப்படும் 'பாட்டுஸ்தவம்' எனும் திருவிழாவில் பக்திப் பாடல்கள் மூலம் தெய்வங்களுக்கு மரியாதையும், காணிக்கையும் செலுத்தப்படும்.

Please Wait while comments are loading...