ஷீஷ் மஹால் நரேந்தர சிங் மகாராஜாவால் 1847-ஆம் ஆண்டு மோடி பாக்ஹ் அரண்மனைக்கு பின்புறமாக கட்டப்பட்டதாகும். பட்டியாலாவை ஆண்ட மகாராஜாக்கள் இங்கே வாழ்ந்துள்ளனர்.
இந்த மாளிகை 'கண்ணாடி மாளிகை' என்றும் அழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் இங்கு காணப்படும் கண் கவரும் வண்ண கண்ணாடிகள். இந்த மஹாலுக்கு அழகு சேர்க்கும் விதமாக இதற்கு முன் ஒரு அழகிய ஏரி ஒன்று உள்ளது.
இந்த ஏரிக்கு நடுவே ஒரு பாலமும் இருக்கிறது. இதனை லக்ஷ்மன் ஜ்ஹூலா என்று அழைக்கின்றனர். இந்த மஹாலில் உள்ள அருங்காட்சியகத்தில் உலகத்தில் பல மூலையில் இருந்து வாங்கப்பட்ட பல பதக்கங்களை காணலாம்.
அழகிய வேலைப்பாடு, சுவர்கள் மற்றும் உட்கூரையில் காணப்படும் செதுக்கல்கள் ராஜஸ்தான் மற்றும் காங்க்ராவை சேர்ந்த கலைஞர்களின் கடின வேலையை எடுத்துரைக்கும். ஒவ்வொரு வருடமும் பல கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரிய திருவிழாக்களும் இந்த மஹாலில் நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications