பீர்மேடு மலைப்பிரதேசத்தில் டிரெக்கிங் செல்வது சாகசப் பிரியர்களின் மிகவும் விருப்பமான பொழுபோக்கு. அப்படி பனி படர்ந்த மலைகளுக்கு நடுவில், வெள்ளி ஓடைகளை கடந்து டிரெக்கிங் செல்லும் அனுபவம் உங்கள் மனதை விட்டு என்றும் அகலாது.
அதோடு இந்த மலைக்குன்றுகளில் நீங்கள் குதிரையேற்றம், மிதிவண்டி பயணம் போன்றவற்றிலும் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
பீர்மேடு மலைப்பிரதேசத்தில் கல்தோட்டி, வாகமன், கரண்டகபாரா, கிராம்பி, பரந்துபரா, மேமலா போன்ற குன்றுகள் புகழ்பெற்ற டிரெக்கிங் குன்றுகளாக அறியப்படுகின்றன.
இந்த மலைக்குன்றுகளில் சாகசப் பயணம் மற்றும் பிற விளையாட்டுகளில் ஈடுபட விரும்பும் பயணிகள் பனிக் காலங்களில் பீர்மேடு வருவதுதான் சிறப்பானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் டிரெக்கிங் செல்ல விரும்புவர்கள் உணவு மற்றும் குடிநீரை எடுத்து வருவது மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications