பிலிபிட் சமூக அமைதி நிரம்பிய இடமாக நிலவுகிறது. ஏராளமான கோவில்கள் இங்கிருந்தாலும் இஸ்லாமியர்களுக்கான ஜம்மா மஸ்ஜித்தும் இங்கு உள்ளது. 250 ஆண்டுகள் பழமையான இந்த மசூதி முகாலய அரசின் போது ஹஃபிஸ் ரஹ்மத் கான் என்பரால் கட்டப்பட்டது.
அவரது இறப்பிற்கு பின்பு இங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார். டெல்லியில் உள்ள ஜம்மா மஸ்ஜித்தைப் போலவே அமைக்கப்பட்டுள்ள இந்த மசூதிக்கு அந்தக் காலத்திலேயே மூன்று லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
முகாலய முறைப்படி சுவர்கள் இருந்தாலும் கூரை வங்காளக் கலாச்சாரப்படி கட்டப்பட்டுளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் போது தொழுகைக்காக இஸ்லாமியர்கள் இங்கு கூடுகிறார்கள்.



Click it and Unblock the Notifications