ஆரோவில் நகரம், பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும் ஆரோவில் நகரம், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களையும், கலாச்சாரங்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது.

50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையுடைய இந்த நகரம் ஒரு சர்வதேச நகரமாகும். சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் இருக்கும் ஆரோவில் கலாச்சார அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக உள்ளது.

மக்களால் 'அன்னை' என்று அன்புடன் அழைக்கப்படும் மிர்ரா அல்பாஸ்ஸா என்ற வெளிநாட்டவரால் நிறுவப்பட்ட ஆரோவில் நகரம், ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டியினால் 1968-ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டமாகும்.

நாடு, கலாச்சாரம் முதலிய கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் ஒருமைப்பாடு மற்றும் உலகளாவிய அமைதியுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் ஒன்றாக வாழச் செய்து அதன் மூலம் அமைதி மற்றும் வளர்ச்சியை உருவாக்குவதே இந்த நகரம் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும்.

ஆரோவில் நகரம்—அமைதிப் பகுதி, தொழிற்சாலை பகுதி, குடியிருப்பு பகுதி, பன்னாட்டு பகுதி, கலாச்சார பகுதி மற்றும் பசுமைப் பகுதி என வெவ்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய கட்டிடக்கலை வடிவமைப்பிற்காக பார்வையாளர்களைக் கவரும் மாத்ரிமந்திர் இந்நகரத்தின் முதன்மையான சுற்றுலா பகுதியாகும். இந்நகரத்திற்கு அருகிலிருக்கும் ஆரோ கடற்கரை சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க மிகவும் ஏற்ற இடமாகும்.

Please Wait while comments are loading...