பொன்னனி நகரின் முக்கிய கவர்ச்சி அமசங்களில் ஒன்றான பீயம் காயல் அல்லது பீயம் ஏரி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு வருடமும் ஓணம் திருவிழாவின் பொது இங்கு வெகு விமரிசையாக நடைபெறும் படகுப்போட்டியை காண பயணிகள் கூட்டம் அலைமோதும்.
அப்போது பார்வையாளர்கள் போட்டியை பார்த்து ரசிப்பதற்காக பிரத்தியேகமாக காட்சி மாடம் ஒன்று இங்கு அமைக்கப்படும். இந்த படகுப்போட்டியில் ஏறத்தாள இரு டஜன் படகுகளில் ஏராளமான வீரர்கள் ஆர்ப்பரித்து படகு செலுத்தும் காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
பீயம் காயலை முக்கிய சுற்றுலா மையமாக மாற்றும் முயற்சியாக மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் இங்கு எண்ணற்ற நீர்விளையாட்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிகள் பீயம் காயலில் தங்களுக்கு பிடித்தமான நீர்விளையாட்டுகள் மற்றும் இதர பொழுபோக்குகளில் ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.
பீயம் காயலுக்கு குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தொங்கு பாலம் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்களில் ஒன்று. அதோடு இந்த காயல் நீர்ப்பரப்பின் கரைகளில் நவீன வசதிகளுடன் பயணிகளுக்கான ஓய்வு இல்லங்களும் இருக்கின்றன.



Click it and Unblock the Notifications