கீர்த்தி மந்திர், மஹாத்மா காந்தி அவதரித்த புனிதமான இடமாகும். மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி, போர்பந்திரில் உள்ள மூன்று தளங்களை உடைய கட்டிடமான புளூ ஹவேலியில், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார்.
தற்போது இக்கட்டிடம், காந்தியின் வாழ்வைப் பற்றிய சில சுவாரஸ்யமான புகைப்படங்கள், காந்தி உபயோகப்படுத்திய சில அரிய பொருள்கள், காந்தியக் கோட்பாடுகள் மற்றும் வாழ்வியலைப் பற்றிய நூல்களைக் கொண்டுள்ள ஒரு நூலகம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications