புனே நகரத்தின் உச்சியில் காணப்படும் இந்த பார்வதி மலைக்கோயில் 17ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கூறப்படுகிறது. கணபதி, பார்வதி போன்ற தெய்வங்களின் சிலைகள் இங்கு காணப்படுகின்றன.
முதலில் பேஷ்வா மன்னர்கள் மட்டுமே வணங்குவதற்கு பயன்பட்டு வந்த இந்த கோயில் பின்னர் பொது மக்களுக்கும் திறந்து விடப்பட்ட்தாக இதன் வரலாறு கூறுகிறது.பழமையான கற்சிற்ப வேலைப்பாட்டினை இந்த கோயில் கொண்டுள்ளது. வழிபடுவதற்காகவும் வேண்டுதலுக்காகவும் ஆயிரக்கணக்கில் இங்கு பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கோயிலுக்கருகில் பார்வதி அருங்காட்சியகம் என்ற பெயரில் பார்வதி தெய்வத்துக்கான ஒரு அருங்காட்சியகமும் காணப்படுகிறது. மலை ஏறிகளுக்கு உகந்த இடமாகவும் இந்த கோயில் திகழ்கிறது.



Click it and Unblock the Notifications