பேஷ்வா ராஜ வம்சம் ஆட்சி செய்த அரண்மனையான சனிவார் வாடாவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த - பார்க்க வேண்டிய இடமாகும். சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் 1730ம் ஆண்டு பாஜி ராவ் மன்னரால் இது கட்டப்பட்டது.
1827ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் இந்த அரண்மனை நாசமடைந்து தற்போது இடிபாடுகளுடன் மட்டுமே காணப்படுகிறது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகளுக்காக இங்கு ஒரு ஒலி ஒளி காட்சி விவரண வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது அவசியம் பயணிகள் பார்க்க வேண்டிய ஒன்று.
மராத்திய ராஜ வம்ச நாகரிகத்திற்கு சான்றாக விளங்கும் இந்தக் கோட்டை இன்றும் காணப்படும் மராத்திய கட்டிடக் கலையையும் முகலாய கட்டிடக்கலையையும் ஒன்று சேர்த்த கலவையான இயல்பை கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications