ஸ்ரீ இராமரின் தீவிர பக்தராக விளங்கிய ஜலராம் பாபா என்ற துறவி பிறந்த இடம் தான் ராஜ்கோட்டிலிருந்து 53 கிமீ தொலைவில் உள்ள வீர்பூர் என்ற இடமாகும். அவர் வசித்து வந்த வீடு தற்பொழுது கோவிலாக மாற்றப்பட்டு, அங்கே புகழ் பெற்ற ஜலராம் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் ஒரு தனித்தன்மையான வழக்கத்தைக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள கோவில்களிலேயே பக்தர்களிடமிருந்து காணிக்கையாக எதையும் வாங்காத ஒரே கோவிலாக இது உள்ளது.



Click it and Unblock the Notifications