இராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடி கிராமம் (தற்போது நகரமாக வளர்ந்து வருகிறது) இந்த தீவின் தெற்கு எல்லையில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இடமாகும். இலங்கையின் தலைமன்னார் பகுதியிலிருந்து சுமார் 31 கிமீ தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது.
இராவணனின் தம்பியான விபீஷணர் இராமரிடம் சேது பாலத்தை உடைத்து விடுமாறு கேட்டுக்கொண்டதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வேண்டுகோளுக்கிணங்க இராமர் தன்னுடைய வில் அல்லது தனுசின் ஒரு முனையை கொண்டு சேதுவில் தட்டி அதனை உடைத்தார்.
இந்த வரலாற்று சம்பவம் நிகழ்ந்த இடமாக இன்றைய தனுஷ்கோடி உள்ளதால் அதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. உண்மையில் இன்றும் கூட இராமரின் மேற்பார்வையில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் சுவடுகளை தனுஷ்கோடியில் காண முடியும்.
இந்த பாலம் இன்றும் இராமர் பாலம் என்றே அழைக்கப்படுகிறது. சேதுவில் ஊற்றெடுக்கும் நீர் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதால் புனிதப்பயணிகள் இராமேஸ்வரம் செல்லும் முன் இங்கே குளித்து செல்வார்கள்.
அதேபோலவே, காசிக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளுபவர்கள் இராமேஸ்வரத்திற்கு வந்து தங்களுடைய புனிதப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications