சூரிய கோயில் அல்லது சூரிய நாராயண கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ரணக்பூர் ஜெயின் கோயிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. இக்கோயிலின் அறுகோணவடிவில் அமைந்த சுற்றுச்சுவர்களில் போர்வீரர்கள், குதிரைகள் மற்றும் கிரகங்களின் சிற்பவடிப்புகள் காணப்படுகின்றன.
இவை அக்காலத்திய கலைஞர்களின் திறனுக்கு சான்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. சூரியக்கடவுள் தன் ரதத்தை ஓட்டிச்செல்வது போன்று இக்கோயிலின் சிலை காணப்படுகிறது.
நாடெங்கிலுமிருந்தும் அதிக அளவில் யாத்ரீகர்கள் சூரியக்கடவுளை வழிபடுவதற்கு இந்தக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்த கோயிலுக்கு மிக அருகிலேயே உள்ள அம்பா மாதா கோயிலுக்கும் பயணிகள் விஜயம் செய்து வழிபடலாம்.



Click it and Unblock the Notifications