சிதல்கேத் அல்லது ஷீதல்கேத் என்று அழைக்கப்படும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலம் அல்மோராவிற்கும் ராணிக்கேத் நகருக்கும் இடையில் அமைந்துள்ளது. செழிப்பான பழத்தோட்டங்களுக்கு இப்பகுதி புகழ் பெற்றுள்ளது. பல அரிய மருத்துவ மூலிகைச்செடிகள் மற்றும் தாவரங்களும் இங்குள்ள வனப்பகுதியில் காணப்படுகின்றன.
மாணவர்களுக்கான சாரணர் பயிற்சித்தலமாக பிரசித்தி பெற்றிருக்கும் இந்த ஸ்தலத்தில் இமயமலையின் மனன் மயக்கும் எழிற்காட்சிகளை கண்டு ரசிக்கலாம். சியாஹி தேவி கோயில் இந்த இடத்துக்கு அருகில் உள்ளது.



Click it and Unblock the Notifications